Skip to content

விடுதலை போராளி சேகுவேரா வரலாறு…

புரட்சி என்ற சொல்லுக்கு மறுபெயர் சேகுவேரா.

அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் காலடியில் தூங்கி கிடந்த லத்தீன் நாடுகளை தனது ஆத்ம பலத்தினால் விழித்தெழ வைத்தவர்.

39 ஆண்டுகள் என்ற மிகசொற்ப வாழ்க்கை காலத்தை அவர் வாழ்ந்து முடித்திருந்தாலும்,மின்னல் போன்ற வாழ்ந்து வரலாறு ஆனவர். தனது வாழ்க்கையை முழுமையாக வாழ்ந்த ஒரு மனிதன்.

லத்தீன் நாடுகளில் இவரை தம்மை மீட்க வந்த இயேசுவாக கருதி வழிபடுபவர்களும் உண்டு.உலகின் எங்கோ ஒரு புள்ளியில் சாதரண மனிதராக தோன்றியும்,சேகுவேரா சத்தியத்திற்காக சாக துணிந்து வரலாறை படைத்ததால், உலகம் முழுதும் வியாபித்து விடுதலை குறியீடாக மிளிர்கிறார்.

தான் விரும்பி நினைத்ததை அடைய காட்டும் வேகமே தனது இலட்சியம் மீதான பற்றுறிதியை காட்டுவதாக சேகுவேரா கருதினார்.இதுவே அவரின் பலமும் பலவீனமுமாகும்.

ஆர்ஜென்டீனாவில் பிறந்த எர்னஸ்ரோ குவேரா,சிறு வயதில் இருந்தே துடிதுடிப்புடன் ஓடி விளையாடும் பழக்கத்தை கொண்டிருந்தார்.ஆஸ்துமா நோயினால் பாதிக்கப்படவே,பெற்றோரினால் கவனமாக பாதுகாக்கப்பட்டு வளர்க்கப்பட்டார்.

வளர்ந்தும் மருத்துவம் கற்று தேர்ந்தார்.நண்பனுடன் மோட்டார் சைக்கிளில் தென் அமெரிக்க லத்தீன் நாடுகள் முழுவதையும் பார்க்க சுற்றுலா சென்றார்.

சுற்றுலா செல்லும் இடமெல்லாம் அமெரிக்க ஏகாதிபத்தியத்தால் சுரண்டப்படும் லத்தீன் நாடுகளும்,அவர்களை அடிமையாக்கி வைத்திருந்த அந்நாட்டு அமெரிக்க விசுவாச அரசுகளும் சேகுவேராவின் கோபத்தை கிளறின.

இலத்தீன் நாடுகளை சுற்றி மக்களின் அன்றாட வாழ்க்கையினை நேரில் பார்த்து உணர்ந்துகொண்டார்.அவர்களுக்கு விடுதலைக்கான தேவை இருப்பதை தனது மனதில் குறித்துகொண்டார்.

நாடு திரும்பிய சேகுவேரா,மருத்துவ பணியில் ஈடுபடலனார்.தொழுநோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவினார்.

மார்க்சியத்தை நன்கு கற்று தெளிந்த சேகுவேரா,போராட்டம் புரட்சி பற்றிய தனது புரிதல்களை தனக்குள் ஆழமாக புதைத்து கொண்டார்.

புரட்சி,இதுதான் வாழ்க்கை,இதுதான் தர்மம் என தனக்குள் முடிவெடுத்த கொண்ட போதே,அதற்கான புறநிலைகளும் அவரை சுற்றி தோன்ற ஆரம்பித்து விட்டன.

ஆரம்பத்தில் தனியாக சிறிய சில புரட்சிகளை முயன்று பார்த்தும் தோல்வியடைந்து கொண்டார்.

பின்னார் எதிர்பாரா நேரத்தில் மெக்சிகோவில் கியூபா போராளிகளின் நட்பு கிடைத்தது. நீண்ட புரிதல்களின் பின்னர் பிடல் காஸ்ரோவின் கொள்கைகளால் கவரப்பட்டு அவர்களுடன் சேர்ந்துகொண்டார்.

கியூப புரட்சியில் தனது பங்கை சரிவர செய்தவாறே பிடலின் மனதில் இடம்பெற்றார்.தொடர்ந்த யுத்ததில் சேகுவேராவின் கை ஓங்கவே கீயூப புரட்சி மகத்தான வெற்றி பெற்றது.

கீயுப புரட்சி வெற்றியின் பின்னர் கீயுப குடியுரிமை பெற்று கீயுபாவின் அரச பணியாளரானார்.நிலசீர்த்திருத்தம்,பொருளாதாரம்,கல்வி வளர்ச்சி என்பவற்றில் மிகப்பெரும் மாற்றங்களை கொண்டுவந்தார்.

உலகம் முழுக்க பலநாடுகளுக்கு சுற்று பயணங்களை மேற்கொண்டு,ஏகாதிபத்தியத்தின் கொடும் கரங்கள் உலகம் முழுதும் படர்ந்திருப்பதை கண்டு வருந்தினார்.தனது போராட்டம் கியூபாவுடன் முடிந்துவிடவில்லை,மிகப்பெரிய போர்கள் இனி வரும் காலத்திலயே இருக்கின்றது என்பதை கண்டுகொண்டு அவசரமாக நாடு திரும்பினார்.

தான் வகித்து வந்த அரச பதவிகளை உதறிவிட்டு மீண்டும் போராட்ட வாழ்வில் களம் புகுந்தார்.ஆபிரிக்க நாடான காங்கோ நாட்டை தனது அடுத்த களமாக தேர்ந்தெடுத்து அங்கு சென்றார்.

மக்களை தயார்படுத்தி புரட்சி தீயை சேகுவேரா முயன்ற போதிலும் அது பெருந்தோல்வியில் முடிந்தது.

சேகுவேரை தீர்த்துகட்ட பின்னாலயே சுற்றிகொண்டிருந்த அமெரிக்க உளவுதுறைக்கு விசயம் தெரியவரவே,உஷாரான பிடல் காஸ்ரோ,அவரை மீண்டும் கியூபாவிற்கு வரவழைத்து கொண்டார்.

தான் கொண்ட கொள்கைகளில் இருந்து சற்றும் தளராத சேகுவேரா,தனது அடுத்த இலக்காக பொலிவியா நாட்டை தேர்ந்தெடுத்தார்.

தனது சிறிய அணியுடன் பொலிவியா காடுகளில் திரிந்த சேகுவேராவை அமெரிக்க உளவுதுறை மீண்டும் கண்டுபிடித்துகொண்டது.

இந்த முறை சேகுவேரா தப்பிக்கூடாது என்று முடிவெடுத்து முழுவீச்சில் தனது நடவடிக்கைகளை ஆரம்பித்தது.பொலிவியா மக்களும் காடுகளும் சேகுவேராவுக்கு கைகொடுக்காமல் போகவே,சேகுவேரா பொறுமை இழக்கலனார்.

சேகுவேரா எந்த மக்களுக்காக போராட்ட சென்றாரோ,அவர்களின் அறியாமையே அவரை,தேடியலைந்த அமெரிக்க படையிடம் காட்டிகொடுத்தது.

சுற்றிவளைத்து கொண்ட இராணுவத்திடம் சளைக்காமல் போராடி,காயம்பட்ட நிலையில் பிடிபடுகின்றார்.நீண்ட விசாரணைகளின் பின்னர் சுட்டு கொல்லப்படுகின்றார்.அவர் கொலை செய்யப்பட்ட ஊர் இன்றுவரை சபிக்கப்பட்ட நரகமாகவே காட்சிதருகின்றது.தம் அறியாமை பாவங்களுக்காக இரத்தம் சிந்திய சேகுவேராவை இயேசுவாக கருதி வழிபட்டு கொண்டுள்ளார்கள்..

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: