Skip to content

கலாச்சார வேர்கள்

ஆதி மனிதர்கள் தனித்தனியாக காட்டில் அலைந்து திரிந்து,இயற்கையில் இருந்து சிறிது சிறிதாக அறிவை பெற்று குழுக்களாக சேர்ந்து செயல்பட தொடங்கினர்.பின்னர் குழுக்கள் சேர்ந்து சமூகம் என்றாகியது.முதலில் தனி மனிதர்கள் தங்களில் தாக்கம் செலுத்தி வந்த நிலையில் சமூகத்தில் கூட்டமாக வாழ ஆரம்பித்த மனிதர்களுக்கு தமக்கென ஒரு பொது நடைமுறைகளை பின்பற்றி வாழ வேண்டியதாக இருந்தது.தலைமுறை தலைமுறைகளாக தாங்கள் இயற்கையில் இருந்து பெற்று கொண்ட அறிவை வைத்து தங்களுக்கு என்று தாங்கள் நிலைபெற்ற மண்ணில் ஒரு அடையாளத்தை ஏற்படுத்திகொண்டனர்.சென்ற தலைமுறைகளில் இருந்து இனி வரும் தலைமுறைகள் வரை ஒரு சமூக பாங்கில் கட்டுபடுத்தி தங்கள் கூட்டத்தை ஒரு வழியில் கொண்டு போகவும்,தங்களுக்கு என்று உலகில் ஒரு தனித்த அடையாளத்தை ஏற்படுத்தும் விதமாகவே கலாச்சாரம் என்று ஒன்று உருவானது.தனிமனிதர்கள் தாண்டி குழுக்களாக இணைந்து செயற்பட தொடர்பாடலாக ஒலி வடிவில் மொழி பிறந்தது,மொழியை அடிப்படையாக கொண்டு குழுக்கள் முன்னேற தொடங்கியதும்,சமூகம் பல வழிகளில் வளர்ச்சியடைய தொடங்கியது.இயற்கையில் சாதாரண ஒலி சொற்களை கொண்டு சமூகத்தின் முதல் மொழி உருவாகியது.மனிதர்கள் தங்களின் உணர்வுகளை மற்றையவர்களுக்கு கடத்த சாதாரண அ,இ,உ,எ,ஒ,போன்ற ஒலிகளை இயற்கையாக தமக்குள் பயன்படுத்த தொடங்கி வெற்றி கண்டனர்.அவை தலைமுறைகள் கடந்து விரிந்து உலகின் முதல் மொழி தமிழ் மொழியின் உயிர் சொற்களானது,சமூகத்தின் வளர்ச்சிக்கு தொடர்பாடல் இன்றியமையாத ஒன்று.தொடர்பாடல் மொழி குறிப்பிட்டளவு வளர்ச்சியடைந்ததும்,அதனை அடிப்படையாக வைத்து விவசாயம்,கல்வி,தொழில்நுட்பம் என்று பரந்து விரிந்த தளத்தில் சமூக மக்கள் தங்களின் பங்களிப்பை செய்தவாறு முன்னேறினர்.இவை அனைத்துக்கும் ஒரு அடையாளம் சமூகத்துக்கு என்று உருவாகியது,அதுவே கலாச்சாரம்! தமிழ் கலாச்சாரம்.கலாச்சாரம் என்பது ஒரு மரத்தை போன்றது,அது எவ்வளவுக்கு அதிகமாக தன் மண்ணில் வேருன்றி உள்ளதோ அவ்வளவுக்கு அதிகமாக வெளியில் கிளைபரப்பி பல்லாண்டு காலம் வாழும்.

மனிதர்கள் தங்கள் முன்னோர் வழிவந்த மரபறிவை கொண்டு தமது சமூகத்தை முன்னோக்கி கொண்டு செல்வதற்கு தமது அடிப்படை தேவைகள் தொட்டு ஆடம்பர தேவைகள் வரை தமது மனவியல்புக்கும் மண்ணுக்கு ஏற்றமாதிரியான கலாச்சாரங்களை ஏற்படுத்தி கொண்டு உலகெங்கும் வாழதலைப்பட்டனர்.

உணவு உடை உறையுள் என்று அடிப்படை தேவைகளை கொண்டு உருவாகிய கலாச்சாரம் பின்னர் பொழுபோக்கு,தொழில்நுட்பம்,விளையாட்டு நிகழ்வுகள் என்று அந்த சமூகம் சார்ந்த அத்தனை அம்சங்களிலும் பிரதிபலிக்கதொடங்கியது,மனிதர்கள் சமூகத்தில் தங்களுக்குள் ஒரு வலுவான உறவுகளை ஏற்படுத்தி கொள்ளவும் உலகத்தின் முன் தாங்கள் சார்ந்த சமூகத்தின் அடையாளமாகவும் தங்கள் கலாச்சாரத்தை நிலைநிறுத்துகின்றனர்.தமது கலாச்சாரத்தை கல்வி மூலமாகவும்,திருவிழாக்கள்,சடங்குகள்,வழிபாடுகள் மூலமாகவும் தமது அடுத்த சந்ததிக்கு கடத்துகின்றனர்.ஒரு இனம் காலங்களை தாண்டி தமது அடையாளத்தோடு உலகில் வாழ கலாச்சாரம் உதவுகின்றது.வரலாற்று சக்கரம் சுழல காலங்கள் கடுகதி வேகத்தில் செல்ல தொடங்கியது.காலநிலை மாற்றங்களினாலும் மனித இடம்பெயர்வுகளினாலும் கலாச்சாரங்களில் மாற்றம் ஏற்பட தொடங்கியிருந்தது.அந்நிய ஆக்கிரமிப்புக்களினால் பலமான சமூகங்களின் கலாச்சாரங்கள் அவர்களினால் அடிமைப்படுத்தப்படும் பலவீனமான சமூகங்களின் கலாச்சாரங்கள் மீது ஆயுத முனையில் திணிக்கப்பட்டன.வரலாற்றின் ஒரு குறிப்பிட்ட காலம் வரை சமூகங்கள் தங்களின் அடிப்படை தேவைகளின் பொருட்டு ஆக்கிரமிப்புக்களை நிகழ்த்தி கொண்டிருந்தன.அவற்றினால் உலகம் முழுதும் உண்டான கலாச்சார மாற்றங்கள் பாரியளவிலான பின்விளைவுகளை ஏற்படுத்தவில்லை.

பின்னாட்களில் சமூகங்கள் தொடர்ந்து முன்னேறி நாடுகளாகி துணை கண்டங்களானது. மக்கள் தொகை அதிகரித்தது.தேவைகளும் அதிகரிக்க வணிகங்கள் தோன்றியது.ஆரம்பத்தில் தனக்கு வேண்டியதை தானே உற்பத்தி செய்தி வாழும் தற்சார்ப்பு பொருளாதாரத்தில் இருந்த சமூகம் அதிகரித்த மக்கள் தேவைகளை கருத்திற்கொண்டு சந்தை பொருளாதாரத்துக்கு மாற்றம் பெற்றது.அண்டை நாடுகள் தொடங்கி தொலைதூர நாடுகள் வரை வணிகம் நடைபெற தொடங்கியது.இங்கு நாட்டில் தேவைக்கு அதிகமாக கிடைக்கும் பொருட்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதுடன் வெளிநாடுகளிலிருந்து இங்கு தேவையானவற்றை இறக்குமதி செய்து கொள்ளும் அளவுக்கு பொருளாதார முன்னேற்றம் ஏற்பட்டது.அசாதாரணமாக முன்னேறிய பொருளாதாரம் சமூகத்தின் கலாச்சாரத்தை நிர்ணயிக்க தொடங்கியது.பல்லின நாடுகளின் தொடர்புகள்,இடம்பெயர்வுகள்,ஆக்கிரமிப்புக்களினால் சமூக கலாச்சாரங்கள் வேறு நாடுகளிலும்,வேற்றின கலாச்சாரங்கள் இங்கும் பரவ தொடங்கியது.

ஆனால்,பின்னாளில் சமூகத்தினரின் மனித மனங்களின் பலவீனத்தால் மதங்கள் உருவாக்கம் அடைந்த பின்னர் வளர்ச்சியடைந்த சமூகங்களினால் உலகம் முழுதும் இருக்கும் பலவீனமான தற்சார்ப்பு வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருந்த பல்லின சமூகங்களில் தங்களின் கலாச்சாரங்கள் மத திணிப்புடாக இலகுவாக பரப்பமுடிந்தது.மதம் என்ற இலகுவாக மனித மனங்களை உசுப்பேற்ற கூடிய ஒரு ஊடகம் கலாச்சார திணிப்பில் மிகப்பெரும் பங்கு வகிக்கின்றது.

இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சியடைந்த உலகில் வளர்ச்சியடைந்த சமூகங்கள் தமது கலாச்சாரங்களை வணிக நோக்கத்துக்காக நீண்டகால நோக்கில் உலகம் முழுதும் பரப்ப முனைகின்றன.உலக ஒழுங்கை முழுமையாக தீர்மானிக்கும் சக்தியாக வணிகம் மாறிய பின்னர் உலகம் முழுதும் வாழும் பல்லின சமூகங்கள் மீது அவர்களை அறியாமலேயே அவர்களின் கலாச்சாரம் மீது ஒரு அமைதி போர் கடந்த சில தசாப்தங்களாக நடைபெற்றுவருகின்றது.சமூகங்களில் எஞ்சியிருக்கும் அவர்களின் மரபுகளை மீதியின்றி அழித்து ஒழித்துவிட்டு சமூகங்களை தங்களை நோக்கி கையேந்த வைத்து,அதை அடிப்படையாக வைத்து தங்கள் வணிகத்தை கட்டமைத்து வைத்து கொண்டு காய்நகர்த்துகிறார்கள்.உதாரணமாக ஜல்லிகட்டு மூலம் மரபு ரீதியான மாடுகளின் சந்ததி தொடர்ந்து பெருகும்,ஜல்லிகட்டை தடை செய்வதன் மூலம் மரபுரீதியான மாடுகளின் இயற்கை உருவாக்கத்தை படிப்படியாக குறைத்து காணாமல் செய்துவிட முடியும்.பின்னர் அதை வைத்து தங்களின் வணிகத்தை அந்த நிலத்தில் முழுமையாக ஏற்படுத்தி கொள்ளலாம்.

இன்னொரு உதாரணத்துக்கு இந்தியா என்ற பெரிய மக்கள் கூட்டத்தை கொண்ட மிகப்பெரும் சந்தையில் அதிகமான குறிப்பிட்ட வயது பெண்களை இலக்கு வைத்து காய் நகர்த்தி அவர்கள் கூட்டத்தில் இருந்து ஒருவரை எடுத்து உலக அழகியாக அறிவிக்கின்றார்கள் மொத்த இந்திய பெண்களும் அதை கொண்டாட வைத்து அந்த உலக அழகியை வைத்து,தங்களின் வணிக பொருட்களை விற்க தொடங்கினார்கள். இன்றுவரை வெள்ளைதான் அழகு என்ற மாயையில் இருந்து நூறு கோடி மக்கள் தொகை கொண்ட இந்திய பெண்கள் வெளியில் வரவில்லை.சமூகம் பெண்களை அடிப்படையாக வைத்தே உருவாகி வளர்கின்றது.பெண்களை அடிமைப்படுத்துவது ஒரு சமூகத்தை அடிமைப்படுத்தியதற்கு சமம்.இந்தியாவில் பெண்களை இவ்வாறாக அடிமைப்படுத்தி அழகு சாதன துறையில் பல இலட்சம் கோடி வியாபாரத்தை செய்து கொண்டே போகிறார்கள்.ஒரு பக்கம் கலாசார திணிப்பு மறுபக்கம் வணிகமுமாக ஒரு கல்லில் இரண்டு மாங்காய்.இவ்வாறாக ஒவ்வொரு துறையில் அந்தந்த சமூகத்தை பெரும்பான்மை மக்களை தங்கள் வலையில் விழுத்தி தங்கள் வணிகத்தை நீண்டகால நோக்கில் ஏற்படுத்தி கொள்கிறார்கள்.ஏதுமறியாத சமூகங்கள் தங்கள் கலாச்சாரங்களை தொலைத்துவிட்டு ஏதிலிகளாக இன்னொரு சமூகத்தின் வாடிக்கையாளராகி அவர்களின் கலாச்சாரத்தை அரைகுறையாக சுமந்து உலகெங்கும் அலைந்து திரிகிறார்கள்.முக்காலத்துக்கும் பொருந்து வலியது வாழும் என்று காட்டுமிராண்டி கோட்பாடு இன்று மனவலிமை கொண்ட அறிவானவர்கள் வாழ்வார்கள் என்ற நிலைக்கு வந்துவிட்டது.உலகெங்கும் சமூகத்து பல்லின கலாச்சாரங்கள் அழிந்துகொண்டிருந்தாலும் மனவலிமையும் அறிவு வாய்ந்த தனிநபர்கள் தங்களை இந்த ஆபத்தில் இருந்து கட்டமைத்து கொண்டு வாழ தொடங்கியுள்ளார்கள்.அவர்கள் புதிய புரட்சிகர சமூகங்களை உருவாக்கி புதிய உலகை வடிவமைப்பார்கள்.

நன்றி

2 Comments »

  1. முற்றிலும் உண்மை,நம்மில் சிலரை தேர்த்தெடுத்து அவர்களை வைத்தே தனக்கான ஆதாயத்தை ஒருகூட்டம் அடைந்துக்கொள்கிறது…

    Liked by 1 person

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: