Skip to content

பெண்ணியலும் படைப்பியலும் ;

உலகம்,பல கண்டங்கள்,பல நாடுகள்,பல நகரங்கள்,பல ஊர்கள்,வீடுகள் என்று பல பரிமாணங்களாக வெளியில் தெரிந்தாலும் அதன் மூலம் ஒரு குடும்பமாகும்.குடும்பத்தின் மூலம் பெண்ணாகும்.அத்தனை ஆரம்பமும் பெண்ணில் இருந்துதான் ஆரம்பிக்கின்றது.நீரின்றி அமையாதது உலகு என்பதற்கு ஏற்ப உலகில் உள்ள அனைத்தும் நீரினாலேயே கருத்தரிக்கின்றது.நாகரீகங்கள் நதிக்கரைகளை அடிப்படையாக வைத்தே தோற்றம் பெற்று வளர்ச்சியடைந்தன,ஒட்டு மொத்த இயற்கையையும் இயக்கும் சக்தி நீராகும்.பெண்ணானவள் நீரை போன்றே சமுதாயத்தை படைத்து அதனை இயக்கியவாறு இருக்கின்றாள்.பிரபஞ்சத்தில் எவ்வாறு சடமும் சக்தியும் மாறி மாறி நிறைந்து இயங்கியவாறு உள்ளதோ அதே போலவே ஆணும் பெண்ணும் சேர்ந்து சமூகத்தை இயக்கியவாறு உள்ளன.ஆண்,பெண் என்பதில் எதுவுமில்லை ஆண்மை,பெண்மை என்ற தன்மையிலயே அத்தனையும் அடங்கியுள்ளது.இயற்கையில் உள்ள அனைத்தும் ஏதோ ஒருவகையில் ஒன்றில் ஒன்று தங்கியிருக்கும் வகையிலயே படைக்கப்பட்டிருக்கின்றது.இந்த தங்கியிருக்கும் ஒழுங்கு முறைகள் மீறப்படும்

போது அவை முழு கட்டமைப்பையும் பாதிப்பதுடன் அதற்கான பின்விளைவுகளையும் சந்தித்து கொள்கின்றன.இதற்கமைய ஆண்களும் பெண்களும் இதில் அடங்கியுள்ள இரு மூலங்கள்,அவைகள் இயற்கையிலுள்ள மற்றைய அனைத்தையும் போல ஒருவரில் ஒருவர் தங்கியுள்ள மாதிரியே படைக்கப்பட்டுள்ளன.அதனை கடைசிவரை காத்துகொள்ளும்படியாகவே இங்கு அனைத்தும் படைக்கப்பட்டுள்ளன.எல்லா உயிரிகள்,மூலங்களிலும் ஆண்,பெண் தன்மையாகவே படைக்கப்பட்டுள்ளன்.இது பிரபஞ்சத்தின் இருமை தன்மையாகும்.அதாவது ஒரே பொருள் இரு இயல்புகளை வேறு வேறு பரிமாணத்தில் வெளிக்காட்டுவது.மனித உயிர் ஒன்றுதான்,அதன் இரு இயல்பே ஆணும் பெண்ணும்

மனிதர்களின் மனதே எண்ணங்கள் இங்கு அத்தனையையும் படைத்து அவைகளே செயல்களாக கருத்தரித்து பொருட்களாக பரிணமிக்கின்றன.அத்தனை எண்ணங்களை கட்டுபடுத்தும் முதலாக பெண்மையே இருக்கின்றது.பெண்களின் படைப்பு சுழற்சியை வைத்தே மாத கணக்கு அளவிடப்படுகின்றது.சந்திரன் மனிதர்களின் மனதின் இயக்கத்தை கட்டுபடுத்துகின்றது என்று நவீன அறிவியல் நிரூபித்திருக்கின்றது.விதியை மதியால் வெல்லலாம் என்ற பழந்தமிழர் வாசகம் குறிப்பிடுவதும் இதையே,விதி என்ற உலகம் முழுதும் பலமாக பரவியிருக்கும் மனித மன கருத்துலகத்தை மதியால் வெல்லலாம் என்பதன் மூலம் விதிக்கே விதி மதிதான் என்பது தெளிவு.வரலாறு முழுதையும் ஆராய்தறிந்து படித்தால் புரியும் பெண்மை எவ்வாறு விதிகளை முறித்து தன்னை நிலைநிறுத்தி கொண்டது என்று.பெண்மையெ சுத்தியே வரலாறு சுழல்கின்றது.வரலாற்றில் பெறப்படும் ஒவ்வொரு வெற்றிகளுக்கு பின்னாலும் பெண்மையே இருக்கின்றது.அதுவே இயக்கசக்தி.அது குடும்பத்தை படைத்து அதன் மூலம் சமூகத்தை படைத்து உலகை இயக்குகின்றது.சக்தியும் சடத்தாலுமான பிரபஞ்சத்தில் ஆண்மை என்பதை பெண்மை எனும் சக்தியினால் ஆட்டுவிக்கப்படும் சடமாகும்.ஆண்களை விட பெண்களே பலமடங்கு அறிவில் சிறந்தவர்கள் என்று நவீன அறிவியல் ஆராய்ச்சிகள் நிரூபித்திருக்கின்றன.மனிதர்களின் மனதை கட்டுபடுத்தும் சந்திரனின் ஒழுக்கு பெண்களின் படைப்பு சுழற்சி ஒழுக்குடன் ஒத்துபோவதும் அதனையே நாம் மாத அலகாக பயன்படுத்துவதும் குறிப்பிடதக்கது.

உலகம் சமூகமாக பல்லாண்டு காலமாக தொடர்ந்து இயங்கியவாறே வந்துகொண்டிருக்கின்றது.சமூகத்தை படைத்து பின்னால் இருந்து இயக்குவது பெண்மையே ஆகும்.இருக்கும் இரு வகை மனிதரில் அதற்குரிய முழு தகைமையும் பெண்களிடமே உள்ளது.பெண்களின் படைப்புலகத்தில் ஆண்கள் உழைக்கும் வெறும் கருவிகள்.ஆயினும் ஆண் பெண் ஒருவரில் ஒருவர் தங்கியே தமது படைப்பு,உழைப்பை மேற்கொள்கின்றனர்.இங்கு யார்,எதனாலும் தனித்து எதுவும் பண்ணமுடியாதபடியே இயற்கை படைக்கப்பட்டுள்ளதுடன்,ஒருவரில் அல்லது ஒன்றில் ஏற்படும் தாக்கம் முழு ஒழுங்கையும் பாதித்து அதன் மூலம் சமனிலையடையும் வண்ணமே உள்ளது.உலகம் நாடுகள் கண்டங்கள் என்று பலவாக பிரிக்கப்பட்டிருப்பதாக வெளிதோற்றத்துக்கு தெரிந்தாலும் அப்படி ஏதும் உண்மையில் இருப்பதில்லை.இருப்பது ஒரு உலகம்,ஒரே இனம் மனித இனமே,இங்கு இருக்கும் எல்லாம் ஒன்றில் ஒன்றோடு உள்ளாக இணைக்கப்பட்டே உள்ளது.ஆண்+பெண் இணைந்த படைப்பில் ஆண்கள்,பெண்கள் தனியாக பிறந்து வந்தாலும்,அவை ஆண்,பெண் என்ற இருமை தன்மையை தங்களுக்குள் கொண்டுள்ளன,அவை தங்களுக்கான தமது மற்றைய பாதியின் இணைவதற்கான உள் தேடலில் ஒரு பக்க விளைவாகவே வெளியில் பெண்கள் ஆண்கள் தமக்குள் இணைவதாகும்.அகத்தில் மனித சந்ததி படைக்கப்பட்டு அவற்றின் புறவிளைவுகளாக மனித சந்ததி படைக்கப்படுகின்றது.மனித அகஉலகில் நடப்பவற்றில் மனிதரின் முழுக்கட்டுப்பாடு இருப்பதில்லை,ஆனால் புற உலகில் நடப்பவை மனிதரின் கட்டுபாட்டிலயே இருக்கின்றது.

உலகை படைத்து இயக்கும் மனதின் இருமை இயல்பே இயற்கையில் எல்லாவற்றிலும் நிறைந்து செறிந்து இரு வகைகளாக காணப்படுகின்றது.மனிதரில் அவை ஆண் பெண் என்று இரண்டின் விளைவுகளாக தமக்குள் பிரிந்து,சேர்ந்து நீண்ட பயணத்தை தொடர்கின்றது.சக்தி பாயும் திசையில் சடம் திரும்ப திரும்ப படைக்கப்பட்டு அழிக்கப்பட்டு படைக்கப்படுகின்றது.ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே என்பது இதன் தமிழ் வடிவமே,சக்தியின் படி மாற்றங்களே ஆக்க,அழிவுகளாக நமக்கு தெரிகின்றது.நமக்கு என்றால் நமது மனது தெரிகின்றது.நமது மனதினால்….

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: