Skip to content

காதல்-வாழ்க்கை-மகிழ்ச்சி பாகம் I

மனித பிறப்பு ஆண்+பெண் என்ற இருமை இணைவதாலேயே ஏற்படுகின்றது.அவ்வாறு பிறக்கும் ஒரு ஆண் அல்லது பெண் ஒருமை,தனது இருமை தன்மையை அடைய எதிர்பாலரை கவரும் வகையிலேயே இருக்கும்.பிரபஞ்சத்தில் எல்லாமே இருமை தன்மை கொண்டவை,இருள்–ஒளி,நல்லது–கெட்டது,குளிர்–வெப்பம் என்று…இருமை தன்மை என்பது உறுதிநிலையை குறிப்பதால் அனைத்து உயிரினமும் மேற்குறித்த இருமை நிலையை அடையவே முயற்சிக்கும்..உயிர் இல்லாமல் உடல் இங்கு நிலைப்பதில்லை,நம் உடலில் உயிர் என்ற அந்த இயக்க சக்தி இருக்கும் வரைதான் உடல் இயங்குகின்றது,அதாவது உடல் உயிருடன் கூட இருப்பதால் அதுவும் தன்னை அழியாத உயிராக நினைத்து கொள்கின்றது.உயிருக்கு மரணம் இல்லை ஆனால் உடலுக்கு உண்டு.மரணமில்லாத உயிர் உடலை விட்டு நீங்கியதும் உடல் அழிய தொடங்குகின்றது…

மனித ஆண்+பெண் இப்பிறப்பில் தொலைத்த தமது இன்னொரு பாதியை தேடுவதே காதலாகும்.அதனால் காதல் எல்லா உயிரினமும் இப்பூமியில் எதிர்பார்க்கும் ஒன்றாகும்.இப்பூமியில் மனித இனம் உட்பட கோடிக்கணக்கான உயிரினங்கள் வாழுகின்றன,அதில் மனிதர்களை தவிர மற்ற அனைத்து உயிரினங்களும் தமக்கு தேவையான எல்லாவற்றையும் இலவசமாகவே பெற்று கொள்கின்றன,பூமியில் வாழ மனிதர்களை தவிர வேற உயிரினமும் காசு கொடுப்பதில்லை,ஆறறிவில் உயர்ந்தாக மார் தட்டி கொள்ளும் மனிதர்களை விட மற்றைய உயிரினங்கள் சிறப்பாகவே இருப்பதாக சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன.ஒரு இராணி தேனி செய்யும் அரச நிர்வாகம் போல சிறப்பாக இதுவரை எந்த மனிதரகளும் செய்ததில்லை ,எறும்பின் உழைப்பு,கழுதையில் வேலைகாரதன்மை என்று பட்டியல் நீளுகின்றது..மனிதர்கள் மனதில் வரும் நோய்களினால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்.வாழ்க்கையில் அவர்களின் இருப்பு,பாதுகாப்பு போன்றவை அவர்களை அச்சுறுத்தியதால்,அந்த அச்சுறுத்தல்களிடமிருந்து தன்னை காத்து கொள்ள காசு/பணம் என்ற மனிதர்களின் ஒரு கும்பலினால் உருவாகப்பட்ட ஒன்றுக்கு அடிமையாக உள்ளனர்…எந்த மனிதனும் தனிய காசை விரும்புவதில்லை,ஆனால் அந்த காசினால் சந்தோசத்தை அடைய முடியும்,மகிழ்ச்சியாக வாழமுடியும் என்று நம்ப வைக்கப்பட்டிருகிறார்கள்.உலகில் உண்மையில் மனிதருக்கு தேவையான மகிழ்ச்சி மட்டுமல்ல அனைத்துமே இலவசமாகவே கிடைக்கின்றது.இதை மற்றைய உயிரினங்கள் எல்லாம் சதா காலமும் பெற்று கொண்டே உள்ளன.மனிதர்களின் பெரும்பகுதி ஒரு சிறுபகுதியானல் அடிமைப்பட்டுத்தப்பட்டு இவ்வாறு அங்குமிங்கும் ஓட வைக்கப்படுகின்றன,

காசை அடைந்தால் அதன் மூலம் மகிழ்ச்சியை வாங்கலாம் என்பது தூக்கத்தை விற்று கட்டில் வாங்குவது போன்றது..உலகில் வாழ்க்கை என்பது நம் பிறப்பு–இறப்புக்கு இடைப்பட்ட கால நேரமாகும்.இக்காலத்தை காசுக்காக வீணாக்குவது,நமது வாழ்க்கையை வீணாக்குகின்றது.எதிர்கால ஆசை மாயையைகளை காட்டி உங்களின் நிகழ்கால வாழ்வை அந்த வாழ தேவையான நேரத்தை உங்களிடமிருந்து பறித்து கொள்ளப்படுகின்றது.உங்களுக்கு காட்டப்படும் ஆசைகளை உற்றுநோக்கினால் பல அர்த்தமற்றவையே,அவற்றினால் நிரந்தர மகிழ்ச்சி எதையும் தரமுடியாது,நிரந்தரமான உங்களுக்கு தேவையான உங்களின் அழியாத உயிருக்கு தேவையான மகிழ்ச்சி,தேவைகள் எல்லாம் உலகில் இலவசமாகவே கிடைக்கின்றது.அவ்வாறே எல்லாம் படைக்கப்பட்டுள்ளது ஆனால் உயிருடன் இருக்கும் உடல் தான் அழிய போவதை மறந்து தன்னையும் உயிராக நினைத்து தனக்கு தேவையான மகிழ்ச்சியை அடைய உங்களை மனதின் மூலம் தூண்டுகின்றது,மக்கள் காலத்துடன் காசை நோக்கி அவசரமாக ஓடவைக்கப்படுபவதன் நோக்கம் அவர்களை சிந்திக்கவிடாமல் பண்ணுவதே.மற்றைய உயிரினங்களை விட வேகமான மனது கொண்ட மனிதனே இந்த ஆபத்தில் அதிகமாக சிக்கிகொண்டு அல்லல் படுகின்றான்.சாகும் போது தனது வாழ்க்கை பாதையில் எந்தவொரு மகிழ்ச்சியையும் கண்டறியாது ஒரு அவலமான அசிங்கமான சாவை எதிர்கொள்கிறான்,உண்மையான மகிழ்ச்சியுடன் வாழ்வை வாழ்ந்தவர்கள் சாவை கண்டு பயந்ததில்லை,அவர்கள் உண்மையை கண்டுகொண்டு வாழ்ந்திருப்பார்கள்,ஆனா காசு என்ற மாயை உலகத்தை நம்பி தமது வாழ்வை பறிகொடுத்தவர்கள் வாழ்க்கை இறுதிவரை கவலைகிடமாகவே இருக்கும்,அவர்களு உண்மை தெரியவரும் போது அவர்களிடன் வாழ்வதற்கு வாழ்க்கை இருக்காது,

மனிதர்களுக்கு தேவையான எல்லாமும் அவர்களாக அவர்களை சுற்றி படைக்கப்பட்டுள்ளது.ஆனால் சிறுவயதிலயே தொடரும் பாடசாலை கல்வி அவர்களை வாழா வெட்டியாக்கிவிடுகின்றது.மனிதர்கள் சுற்றி உள்ள சூழலை வைத்து கற்றுகொள்கிறார்கள்,சூழல்–மனிதன் இடையிலான தூண்டல் துலங்கல்களே உலகில் மனிதனுக்கு தேவையான உண்மையான படிப்பாகும்,காரணம் மனிதன் இயற்கையில் வித்து,அதனை சார்ந்தே அவனது முழு வாழ்க்கையும் அமைந்திருக்கின்றது.குழந்தைகளுக்கு கற்று கொடுக்க கூடாது சூழலில் இருந்து கற்று கொள்ள விடனும்,அவர்களாக அதனை குழந்தை பருவத்தில் மண்ணில் இருந்தே ஆரம்பிப்பார்கள்,ஆனால் நாம் எமது அடிமை பாதுகாப்பு முறையை நம்பி காசுதான் மகிழ்ச்சி பாதுகாப்பை தரும் என்று நம்பி அடுத்த சந்ததியையும் எம் கூட இழுத்து கொள்கிறோம்.அவர்களை பாடசாலை என்னும் சிறைக்குள் அடைகின்றோம்,இயற்கையாக பிறக்கும் மனிதனுக்கு தேவையான எல்லாம் இயற்கையாக கிடைக்கும் போது அவர்களை மனிதர்களால் உருவாக்கப்பட்ட பொறிமுறைகளினுள் அடைப்பது என்பது மனித இனத்தை ஒரு அடிமையாக உருவாக்கி ஒரு கும்பலுக்கு வேலை செய்ய வைக்கின்றது,

இவ்வாறு வளரும் குழந்தைகள் தேர்ந்தெடுக்க வரையறுக்கப்பட்ட 10-15/20 பாதைகள் காட்டப்படுகின்றன,அவற்றில் ஒன்றில் தன்கூட பிறந்த சக மனிதரோடு போட்டி போட்டு வென்று வாழ்வை தொலைத்து காசை உழைத்து பின் வாழ்வை தேடி அது கிடைக்காமல் அவலமாக சாக போகும் நிலைக்காக அதாவது வாழும் இந்த உண்மை நிமிடமான நிகழ்காலத்தை காசுக்கு விற்று வர போகும் அந்த காசை வைத்து எதிர்காலத்தில் மகிழ்ச்சியாக வாழலாம் என்ற மாயை கோட்பாட்டில் தங்களை சிறைபடுத்தி அதில் சுகம் கண்டு கொள்கின்றன.

பருவ தேடலும் வாழ்வின் உண்மை மகிழ்ச்சியை சேர்ந்து அனுபவிக்க போகும் தனது மறுபாதியை மனிதர்கள் தமது இந்த காசு/அற்ப மகிழ்ச்சி என்ற இலக்குகளை வைத்து அதற்காக தேர்ந்தெடுப்பதன் மூலம் தங்களை தாங்களே படுகுழியில் விழுத்திகொள்கின்றன.இயற்கையில் மனிதர்கள் விரும்புவதற்கும் விரும்பபடுவதற்குமே படைக்கப்பட்டுகின்றார்கள்,பொருட்கள் பயன்படுவதற்காக படைக்கப்பட்டுள்ளது,ஆனா மனிதர்கள் தலைகீழாக பொருட்களை விரிம்ப ஆரம்பிப்பதால் மனிதர்களை பயன்படுத்த தொடங்குகின்றார்கள்,இதனால் மனித உறவுகள் சிக்கலடைந்து மோசமாகின்றன,அதிலும் குறிப்பாக இயற்கை ஊடான மனித உறவுகள் தொடர்புகள் அர்த்தமுள்ளவையாக காணப்படுகின்றன,ஆனால் காசு/பொருட்கள் என்பனவற்றின் பின்னால் தமது வாழ்வை/வாழவேண்டிய நேரத்தை தொலைத்தவாறே அவசரமாக ஓடும் மனிதர்கள் எல்லாவற்றையும் அந்த அவசரத்தோட அணுகுகிறார்கள்,அவர்களின் கவனம் முழுதும் ஓட்டத்திலயே இருக்கின்றது,ஆனால் உண்மை வாழ்க்கை இங்கு ஒவ்வொருத்தருக்கும் ஒன்று,இயற்கையில் திரும்பி பக்கமெல்லாம் வாழ வழியிருக்கும் போது இவர்கள் சமூகத்தினால் கட்டமைக்கப்பட்ட குறிப்பிட்ட சில பாதைகளினால் மட்டுமே ஓடுகிறார்கள்,அங்கு அடிமை கூட்டம் நிரம்பி வழிகின்றது,கூச்சல் குழப்பங்கள் அதிகரிக்கின்றன,இயற்கையான அறிவு அமைதியாக இருந்து அனைத்தையும் ரசிக்கின்றது.அதற்கு தேவையானது அமைதி,எல்லாவற்றிலும் அமைதி,அதன் மூலம் அது நிரந்தர மகிழ்ச்சியை அடைந்துகொள்கின்றது.அதற்கு சாவை நினைத்து பயந்ததும் இல்லை,ஓடி ஒளிக்க போவதும் இல்லை,ஏன் என்றால் அதற்கு சாவு வரும் நேரம் அது தனது வாழ்வை சரியாக வாழ்ந்து முடித்திருக்கும்,வாழ்வை தொலைத்து காசுக்கு ஓடிகொண்டிருப்பவர்கள் சாவுக்கும் லஞ்சம் கொடுக்கப முயன்று இறுதியில் தோற்பார்கள்…

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: