Skip to content

புதிதாய் பிறக்கின்றோம்…

தாயின் கருவறையிலிருந்து பூமிதாய் மடி இறங்கி சுற்றியுள்ள அனைத்தையும் ஒவ்வொன்றாக ஐம்புலங்களினால் கிரகித்து ஆறாம் அறிவை கொண்டு அவற்றை வழிப்படுத்தி பூமியில் பிறக்கும் ஒவ்வொரு மனிதனும் தனக்கென்று ஒரு மன உட்கட்டமைப்பை உருவாக்கி அதன் மூலம் அகத்தை சீர்படுத்தி புற தூண்டல்களுக்கு ஏற்ப துலங்கி தனது பாதையை அமைத்து கொள்கின்றான்,தொடரும் தனது வாழ்வியக்கத்தில் பாதையை செம்மைபடுத்தி கொள்ளும் தனிமனிதர்கள் தமது எதிர்கால இலக்குகளை அடைய நிகழ்காலத்தினூடு செயல்படுகின்றனர்.

குழந்தைகள் அழுகைகளின் மூலம் தனது தேவைகளை நிறைவேற்றிகொள்ள துடிக்கின்றது,அழுகை என்பது சூழல் புறக்காரணிகளின் அடக்குமுறைக்கு எதிரான குழந்தைகளின் போராட்டமே அழுகையாகும்.தனது சூழலில் உள்ள அத்தனை அம்சங்களையும் ஆழமாக கவனித்து உள்வாங்கி கொள்ளும் குழந்தைகளின் ஆழ்மனமானது அதனை வைத்தே கட்டமைப்படுகின்றது.இவ்வாறு புறக்காரணிகளை உட்கொண்டு எழும் குழந்தையானது தனது உடல் அசைவுகளை உறுதிப்படுத்தி கொள்ள முற்படுவதுடன் தனது அழுகையை பேச்சாக்கி கொள்ள முயற்சி செய்ய தொடங்கி சிறுது சிறிதாக பேசவும் எழுந்து நடக்கவும் தொடங்கி கொள்கிறது.பின்னர் பொருட்களை தொடுவதன் மூலம் அவற்றின் இயல்புகளை கண்டறிய முற்படுகின்றது,பேச்சின் மூலமாக தனது தொடர்பாடலை உயர்த்திகொள்ளும் குழந்தைகள், தொடர்ந்து அவற்றை முன்னேற்றி கொள்ள தன்னை தயார்படுத்தி கொள்ளும் வேளையில் . . .

சமூகம் கல்விமுறை என்னும் தனது அசுரதிட்டத்தில் குழந்தைகளை தனது முதலீடாக தானாக எடுத்து கொள்கின்றது.வகுப்பறை சிறையில் சமுதாய அழுத்தத்தால் வலிந்து திணிக்கப்படும் குழந்தைகள் அங்கு பலவந்தமாக அவர்களின் இயல்புதனத்திற்கு மாறாக செயற்பட வைக்கப்படுகிறார்கள்,எழுந்து நடந்து ஓடி விளையாடும் பருவத்தில் அடக்கி ஒரு இடத்தில் இருத்தப்படுகிறார்கள்,வாயை திறந்து பேசும் வயதில் வாய்மூடி அமைதியாக இருக்க கட்டாயப்படுத்துகிறார்கள்.தொடரும் வகுப்புமுறை அடக்குமுறைகள் குழந்தைகளை அதிகாரவர்க்கத்தின் கீழ்படிந்து நடக்கவும் அதிகாரம் சொல்வதுதான் உண்மை என நம்புபடியுமாக பயிற்றுவிக்கப்படுகிறார்கள்.சீருடைகள்,வகுப்புகற்றல்கள் செயற்பாடுகள் அனைத்தும் மாணவர்களின் நிர்வகிக்க சுலபமாகவே அதிகார வர்க்கத்தால் கட்டமைக்கப்படுகின்றது,இவ்வாறு கட்டமைப்படும் போதே இது மாணவர்களின் சுயத்தை அழித்து அவர்களை பலவீனப்படுத்தி அதிகாரத்துக்கு அவர்களை அடிபணிய வைக்கின்றது,குழந்தையின் ஆழ்மனதில் அடிமைதனத்தை விதைத்து மீதி வாழ்நாள் முழுதும் மனிதர்களை அடிமைகளாக அதிகாரத்தில் தங்கி வாழ நிர்பந்திக்கின்றது.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: