Skip to content

பிரபஞ்ச உலக மனிதமன கூட்டு இயங்கியல் பகுதி II

இயற்கை தன்னை ஒவ்வொரு கண அலகு நேரத்துக்கும் புதுபித்து கொண்டே உள்ளது.இயற்கையில் உள்ள அனைத்தும் இதே செயற்பாட்டுக்கு அடங்கியே மொத்த இயக்கமும் நடைபெற்று கொண்டுள்ளது.மனித மனம் அவன் குழந்தையாக இருக்கும் போது வளர ஆரம்பிக்கின்றது.மனித மனத்தில் உருவாகும் எண்ணங்களே செயலாக விரிவடைகின்றது.மனித மேல் மனம் குழந்தை பருவத்தில் அதிகமாக வேலை செய்து காலபோக்கில் அதன் செயற்பாட்டு வேகம் குறைவடைந்து செல்கின்றது.மனித மேல் மனம் ஐம்புலங்களுடன் கூடிய மனித உடலை சார்ந்து அதிகமாக இயங்குவதால்,மனிதன் வயது அதிகரிக்க அதிகரிக்க அவனது உடல் பலம் குறைந்து போவதால் அவனின் மேல்மனது இயங்கும் ஆற்றலும் குறைந்து செல்கின்றது.ஒரு வயதுக்கு பின்னர் ஆன்மாவுடன் சார்ந்துள்ள ஆழ்மன வேலை செய்ய ஆரம்பிக்கின்றது.அது ஐம்புலன்கள் சாராத,உள்ளுணர்வுடன் கூடிய தளத்தில் இயங்குகின்றது,இதை நாம் வயதான அவர்களின் அனுபவம் என்று சொல்கின்ற போதிலும்,உண்மையில் அவ்வாறு இல்லை,இதே ஆழ்மன ஆற்றல்கள் நீங்கள் பிறந்ததில் இருந்தே உங்களுடன் இருக்கும்.ஆனால் அப்போது ஐம்புலங்களுடன் கூடிய மேல மன சபலம் அதிகமாக இருப்பதால்,உங்களால் இந்த ஆழ்மன உணர்வுகளை உணரமுடியாமல் போய்விடுகின்றது.

இருந்தும் சிலர் சிறுவயதிலேயே சாதனைகள் படைக்க காரணம்.அவர்கள் இந்த உள்ளுணர்வை துணையாக கொண்டு உழைப்பதாலேயே ஆகும்.சிறு குழந்தைகளை நாம் அதிகமாக உற்று கவனித்து பார்த்தால் புரியும் அவர்களுக்கு மண்ணில் விளையாடுவது அதிக விருப்பமாகவும்,மிருகங்கள்,பறவைகளை பார்ப்பது அதிகமும் பிடித்திருக்கும்.அவர்கள் அசையும் பொருட்களினால் அதிகமாக தூண்டப்படுவார்கள்,இதுதான் மனித மனதின் ஆரம்பம்,அசையும் பொருட்களினால் தூண்டபடுதல்,இந்த மனதின் அடிப்படையை அறிந்து அதனை வைத்து உருவாக்கிய தொலைகாட்சி பெட்டி இன்றுவரை மனித மனங்களை தன் முன்னால் கட்டி போட்டு வைத்திருக்கின்றது.தொலைகாட்சி பார்க்கும் குழந்தைகளையும் சரி மனிதர்களையும் சரி உற்று பார்த்தால் அவர்கள் ஏதோ ஒரு மந்திர சக்தியினால் கட்டப்பட்ட மாதிரியான ஒரு கோணத்தில் சரணடைந்து தமது மனித மனதை ஒப்பு கொடுத்துவிட்டு இருப்பார்கள்.தொலைகாட்சியில் ஒரு இடைவேளை வரும்போதுதான் இவர்கள் தங்கள் நிலைக்கு திரும்புகின்றார்கள்.அதுவும் முற்றுமுழுதாக இல்லை,மீண்டும் விளம்பரம் முடிந்ததும் அவர்கள் மறுபடியும் அடக்கமாகின்றார்கள்.

மனித மனம் உருவாகும் போது அதன் அடிப்படை,அசையும் பொருட்களை அதிகம் உண்மையாக நம்புகின்றது.சத்தம் இல்லாத இருட்டில் மனித மனதினால் எதையும் உணரமுடியாமல் இருப்பதால் அது அதை கண்டு பயப்பிடுகின்றது.வெளிச்சத்த கண்டதும் அது உற்சாகமடைகின்றது.மனித மனம் முதன் முதலில் ஒரு பொருளை அறியும் போது அதனை புதிதாக அறிந்துகொள்கின்றது. அதன் பின்னர் மறுபடி எத்தனை முறை அறியும் போதும் அதன் முதல் பார்த்த முறை அதன்மேல் தாக்கம் செலுத்துவதால் அதனால் அதன் பின்னர் புதிதாய் பார்க்கமுடிவதில்லை.ஒரு பூவை முதன் முதலில் பாக்கிறப்ப மனம் அடையும் பரசவத்தை அது மீண்டும் எத்தனை தடவைகள் பார்த்தாலும் அது அடைவதேயில்லை.ஆனால் ஒவ்வொரு பூவும் புதிதாய் பிறந்துகொண்டே போகின்றன.மனித மேல் மனம் புதிதாய் பார்க்கும் சக்தியை தொடர்ந்து தக்க வைப்பதில் தவறிவிடுகின்றது.இதனால் நம்மை ஒரு குறுகிய வட்டத்துக்குள் ஒடுக்கிவிடுகின்றது.மேல் மனது ஆரோக்கியமாக தொடர்ந்து இயங்கிகொண்டே இருக்க தொடர்ந்து நாம் அதற்கு புதிய புதிய பொருட்களை அறிய சந்தர்ப்பம் அமைத்து கொடுத்துகொண்டே இருக்கனும்.

உலகில் மனிதர்கள் இரண்டுவகையினரே..ஒரு வகையினர் உள்ளுணர்வுக்கு ஏற்ப தமது வாழ்க்கையை அமைத்துகொள்பவர்கள்,பெரும்பாலும் இந்திய,சீன தேசத்தவர்கள் ஆன்மீகத்தை வழிகாட்டியாக கொண்டு வாழ்க்கையை கட்டமைத்து கொள்ளும் சமூகங்கள்,இவர்களுக்கு மேல்மனதில் எழும் பிரச்சினைகள் குறைவாகவே இருக்கும்,ஆனாலும் இவர்கள் தமது பாரம்பரிய பாதையை விட்டு விலகும் போது மேல்மனம் இவர்களை அலைகழிக்க ஆரம்பித்துவிடும்.இரண்டாம் வகையினர் மேல்மனதினால் அதிகம் பாதிக்கப்படுவோர்.ஐரோப்பா அமெரிக்க கண்டத்தை சார்ந்தவர்களும் அவர்களின் நாகரீகத்தால் ஈர்க்க பெற்று மாறி வரும் அனைவருக்கும் மேல் மனதின் ஆளுகை அதிகமாக இருக்கும்,இவர்கள் தங்கள் வாழ்க்கையை குறுகிய வட்டத்துக்குள் சுருக்க வேண்டிய வரும்,இதனாலேயே வெள்ளையார்கள் அதிகமாக சுற்றுலா என்று உலகத்தை எப்போதும் சுற்றுவதிலேயே தம்மை ஈடுபடுத்திகொள்வார்கள்.புதிய புதிய விடயங்களில் தம் மனதினை செலுத்துவதால் அவர்கள் மனம் புறவாழ்வுக்குரிய பலவற்றை கண்டறிந்து மேல்மனம் முடிவு இல்லாமல் விரிவடைந்து கொண்டே செல்லும்,

ஆழ்மனது உள்ளுணர்வின் வாழ்ந்து வந்த மக்கள் சீன இந்திய ஆசிய மக்கள் சமுதாயம் இன்று அதிகமாக மேற்கத்தேய மேல்மனதின் வேகத்தால் உருவாகி வரும் நாகரீகத்துக்கு தம்மை பலிகொடுத்து கொண்டுள்ளார்கள் அதற்கு காரணம்.இவர்களின் கட்டுகடங்காத ஐம்புலன்கள் தமது உள்ளுணர்வை தாண்டி மேல்மனதிற்காக வேலைசெய்வதாகும்.மேல்மனதிற்கு வேலை செய்யவே ஐம்புலங்கள் உண்டு,ஐம்புலங்கள் ஒரு கட்டுக்குள் இருக்கும்வரை மேல்மனம் கட்டுக்குள் இருந்துகொள்ளும்.ஆழ்மனம் உள்ளுணர்வு உள்ள இருந்து வரும் கட்டளையினால் இயங்குவது.அதற்கு அலைபாயும் தன்மை இல்லை,ஆனால் ஆழமானது,ஆனால் மேல்மனம் ஆழம் குறைந்தது என்றபடியால் அலை பாய்நதவாறே இருக்கும்,அந்த அலை பாயும் திறன்தான் இன்றைய நாகரீக வளர்ச்சி என்றும் மனிதர்கள் நினைத்து கொண்டுள்ள அத்தனைகளையும் தனித்து படைத்து ஆண்டுகொண்டுள்ளது.

உலகில் உள்ள இந்த இருவகை மனிதர்கள் தாண்டி இவர்களுக்கு இடைப்பட்டதாக இரண்டினாலும் பாதிக்கப்பட்டு இருக்கும் வகையறாக்காள் உண்டு.அவர்கள் தனித்த ஒரு கூட்டமாக இல்லாமல் இந்த இருவகைகுள்ளும்தான் இருக்கின்றார்கள்.உள்ளுணர்வு கொஞ்சம் மேல்மனது கொஞ்சம் என்று மாறி மாறி தாக்கம் செலுத்தும் மனிதர்களும்,மேல்மனதினால் தாக்கமடையும் மனிதர்களுமே அதிகம்.உள்ளுணர்வை மட்டும் இயைந்து செயல்படும் மனிதர்கள் எண்ணிக்கை எப்போதுமே குறைவு.இது இயற்கை சமனிலை,இதே போல் மனிதன் தனக்குள் மாறுபடும் ஆழ்,மேல் மன வேறுபாடுகளுக்கு ஏற்ப உலகை அவர்கள் எதிர்கொள்ளும் விதம் மாறுபடுகின்றது.ஆனால் மனிதர்கள் அதிகளவில் மேல்மனதினால் பாதிக்கப்பட்டு அடிமைநிலையில் புற உலக வாழ்க்கைக்கு அதிகமாக முக்கியத்துவம் கொடுப்பதாலும் அதன் வீரியம் கூடி உலகில் அமைதியின்மையும் கலவரங்களையும் ஏற்படுத்துகின்றது. மனித மனம் தனக்கு தானே நினைத்து கொள்வது புற உலகில் நிலவும் அமைதின்மையால்தான் தாமும்(மனிதமனங்களும்) அமைதியின்மையினால் அவதிபடுவதாக…ஆனால் உண்மையில் அமைதியின்மையினால் அவதிபடுவதை இயற்கையாக கொண்ட மேல்மனதிற்கு அடிமையாகும் மனிதர்களே தாம் வாழும் உலகில் அந்த அமைதியின்மையை பரப்பி உலகை களேபரத்துக்கு ஆக்குகின்றனர்.

மேல் மன அமைதியின்மையினால் பாதிக்கப்பட்டு தாம் வாழும் உலகில் அமைதியின்மையை ஏற்படுத்தும் பல்லாயிரம் கோடி மக்களும் ஆழ்மன உள்ளுணர்வுடன் இயங்க இயற்கையினால் படைக்கப்படும் மனங்களுக்கு அடிமையாகி அமைதியடைவார்கள் அல்லது பெரும் அழிவுகள் மூலம் அழிக்கப்பட்டு சமநிலைபடுத்தபடுவார்கள்,ஆக்கத்திலும் அழிவிலும் சம்பபடுத்த இயற்கை சார்ந்து இயங்கும் ஆழ்மன உள்ளுணர்வு மனிதர்களுக்கு நன்றாகவே தெரியும்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: