Skip to content

பிரபஞ்சம் தழுவிய உண்மை காதல்..

ஓவியத்தை ரசிப்பது யார் ? அதை விற்பவனா? இல்லை வாங்குபவனா? இருவரும் இல்லை…விற்பவன் அதை அதனால் வரும் இலாபத்தை எண்ணி கணக்கு வழக்கில் மூழ்கிவிடுவான்,வாங்குபவன் இதைவாங்கி என்ன செய்யலாம்,எந்த விலைக்கு குறைத்து வாங்கலாம்? யாருக்கு இதை அன்பளிப்பாக கொடுக்கலாம்? இது அவர்களுக்கு மகிழ்ச்சியை கொடுக்குமா? கொடுக்கும் பணத்துக்கு இது பொருத்தமாக இருக்கிறதா?என பலவறான எண்ணங்களினால் அவர்கள் இருதரப்பு மனங்களும் நிறைந்திருக்கின்றது.. அப்படத்தை வாங்கும் என்னமோ விற்கும் எண்ணமோ இல்லாத ஒருவன்தான் அந்த ஓவியத்தை அழகாக உண்மையாக ரசிக்க முடியும்,அவனே அந்த ஓவியத்தை அனுபவிக்கின்றான்,அதனை பாத்து மகிழ்ச்சியடைகின்றான்.

காதலிலும் இதுவே காதலிக்கின்றனவன்,காதலிக்கப்படுபவர்கள் இவ்வாறே எதிர்பார்ப்புக்கள் எண்ணங்களினால் அவர்கள் மனம் நிறைந்திருக்கின்றது,அவர்கள் அதனாலேயே இன்ப,துன்பத்தை தொடர்ச்சியாக அடைந்து கொள்கின்றனர்.அவர்களால் காதலிக்க முடிவதில்லை,காதலை அனுபவிக்க முடிவதில்லை,அதனாலயே அதன் சாயம் வேகமாக வெளுத்துவிடுகின்றது.என்றும் மாறாமல் இருப்பதே உண்மையாகும்,உண்மை காதலில் எந்த எதிர்பார்ப்பும் இருக்காது,எதிர்பார்ப்புக்கள் இருப்பது உண்மை காதலாகாது.எதிர்பார்ப்புக்களை வைத்தே இருவரும் ஒருவருக்கு ஒருவர் சரிவராது,பிரிந்துவிடலாம் என்ற முடிவுக்கு ஒரு கட்டத்தில் ஒருவர் பின்னர் ஒருவராக வருகின்றனர்,ஒருவர் முடிவை எடுக்கின்றார்,அல்லது எடுக்க வைக்கப்படுவார்,மற்றவர் அதனை உடனடியாக ஏற்றுகொள்ளாவிடினும் காலம் அதை கச்சிதமாக நிறைவேற்று கொடுக்கும். ஆனால் எதையும் எதிர்பார்க்காமல் இருக்கின்ற போது எதுவுமே சரிவராது என்றாலும் பிரிந்து கொள்ளாமல் இருப்பதுவே உண்மை உறவுகள்..இந்த உண்மை உறவுகளின் ஆயுள் காலத்தை கடந்து வாழ்ந்து கொண்டேயிருக்கும்..

இந்த பிரபஞ்சத்தில் உள்ள அத்தனையுமே ஓவியங்கள்தான்,இதனை பெரும்பான்மையாக மனிதர்கள் வாங்க,விற்க,சொந்தமாக்கவே முயற்சி செய்கின்றார்கள்,இதனால் உலகை உண்மையாக அனுபவிக்க வேண்டியதை அவர்கள் கோட்டைவிட்டு விடுகின்றார்கள்…வாழ்வு முழுவதும் துன்பங்களால் அலைக்கழிக்கப்பட்டு விலங்குகளை போன்று அவலமாக சாகின்றனர்,இங்கு எதையும் வாங்கவோ விற்கவோ சொந்தமாக்கி கொள்ளும் ஆசைகளை முற்றாக துறப்பவனே உலகை உண்மையாக அனுபவித்து கொள்கின்றான்,அதனை புரிந்து கொள்கிறான்,அதன் ஆனந்தத்தில் திளைக்கின்றான்.அவனிடத்தில் இன்ப,துன்பங்கள் நிலைப்பதில்லை,அவன் எதனாலும் பாதிக்கபடாமல் உலகிற்கு சாட்சியாக மாறிவிடுகின்றான்,அற்ப மனிதர்களின் கதறல்கள்,அழுகைகள் எல்லாம் குழந்தைதனமானவை,பலவீனமானவர்களுக்கு அவ்வுலகில் என்றும் இடமில்லை,உலக ஆசைகளுக்கு உங்கள் மனதில் இடம் கொடுங்கள்,ஆனால் விழிப்புணர்வுடன் இருந்து உண்மையை அறிந்து கொள்ளுங்கள்,அதனால் பாதிக்கப்படாமல் அவற்றை அனுபவித்து கொள்ளுங்கள்.இந்த இயற்கையை உற்று கவனித்து பாருங்கள்,எந்த மரமும் அதன் கனிகளை தானே உண்ணுவதல்லை,எந்த நதிகளும் தனது நீரை தானே பருகுவதில்லை,அவைகள் எந்த எதிர்பார்பும் இல்லாமல் தம் பங்கை பிரபஞ்சத்துக்கு செய்து கொண்டு உள்ளன,இயற்கையை உங்களுக்கு நண்பனாக்கி கொள்ளுங்கள்,அவைகளிடமிருந்து உங்களுக்கு ஞானம் கிடைக்கும்…

அருவருப்பான ஆசைகளே மனித குலத்தின் அனைத்து துன்பங்களுக்கும் காரணம்,அவற்றை துறக்காமல் மனித இனத்தின் மனசாட்சி மாறாமல் அவர்களின் தலையெழுத்து மாறபோவதில்லை,அவர்கள் அங்குமங்குமாக அலைகழிக்கப்பட்டு கொண்டே இருப்பார்கள்,அவர்களது அழுகைகள் ஒருபோதும் பொருட்படுத்தப்படுவதில்லை,மனிதர்கள் தங்களை பலமானவர்களாக நினைத்து கொள்கின்றனர்,அனைத்தலும் இன்பத்தை மட்டும் எதிர்பாக்கின்றனர்,ஆனால் அவர்கள் அறிவதில்லை அவைகள் எல்லாம் இன்பமும் துன்பமும் சேர்ந்தவைகள் என்று,இன்பத்தை எதிர்பார்த்தால்,துன்பமும் அதனுடன் இலவச இணைப்பாக அனுபவித்துதான் ஆகவேண்டும்,

“கடமையை செய் பலனை எதிர்பாராதே” – கீதை

பலன்களை எதிர்பார்பவர்களால் கடமைகளை சரிவர செய்யமுடியாது,

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: