Skip to content

தர்மத்தில் சிறந்த தர்மம் : சிறுகதை

யூத தேசத்தில் ஒருமுறை இயேசு அவர்கள்,அறபணி ஒன்றிற்காக தனது சீடர்களுடன் சேர்ந்து நிதி திரட்டிகொண்டிருந்தார்கள்.அவர் மீது மிகுந்த மதிப்பு கொண்ட செல்வந்தர்கள் நிறைய பொற்காசுகளை அன்பளிப்பாக அள்ளி கொடுத்து கொண்டிருந்தார்கள்.அப்போது அங்கே வந்த ஒரு ஏழை வயதான பெண்மணி,தன்னிடம் இருந்த இரண்டு செப்பு காசுகளை இயேசுவிடம் கொடுத்துவிட்டு மிகுந்த மகிழ்ச்சியுடன் அங்கிருந்து நகர்ந்து சென்றாள்.

பொற்காசுகளை மகிழ்வுடன் எண்ணி கொண்டிருந்த சீடர்கள்,யார் இவள்? பயனில்லாத இரண்டு செப்பு காசுகளை கொடுத்துவிட்டு மகிழ்வுடன் செல்கிறாளே என்று ஏளனமாக சிரித்தார்கள்.இதை பார்த்த இயேசு சீடர்களை நோக்கி,இதுவரை இந்த நற்பணிக்கு அதிக அன்பளிப்பு கொடுத்தது இந்த ஏழை வயதானவள் என்று சொன்னார்.அதை கேட்ட சீடர்களுக்கு ஒரே குழப்பம்,எத்தனையோ செல்வந்தர்கள் பொற்காசுகளை அள்ளி கொடுத்தபோதும்,எவ்வாறு இந்த இரு செப்புகாசுகள் அவற்றை எல்லாம் விட அதிகமாகும் என்று இயேசுவிடம் கேட்டார்கள்.

அதற்கு சிரித்தவாறு பதிலளித்த இயேசு,நம்மிடம் உள்ள அனைத்தையும் முழுமையாக வழங்குவதுதான் உண்மையான தர்மம்,செல்வந்தர்கள் பொற்காசுகளை கொடுத்திருந்தாலும்,தம்மிடம் உள்ளதில் சிறு ஒரு பகுதியைதான் தந்தார்கள்.ஆனால் அந்த வயதான ஏழை,தன்னிடம் இருந்து இரண்டே இரண்டு செப்பு காசுகளையும் எங்களிடம் தந்துவிட்டு நிம்மதியாக போகிறாள்.அவள் செய்த தர்மம்தான் அனைத்தையும் விட மிகசிறந்தது என்றார்,சீடர்கள் வாயடைத்து நின்றனர்..

நீதி – தரப்படும் பொருட்களின் மதிப்பை வைத்து அளவிடாதீர்கள்,அவை எந்த நிலையில் இருந்து தரப்பட்டது என்று அளவிடுங்கள்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: