Skip to content

தனிமனிதர்களிலான உலகம் ; பகுதி 1

உலகில் காணப்படும் ஒவ்வொன்றும் தனிதனியாக வகைப்படுத்தகூடியவை.அவை தனியாகவே தோன்றி மாற்றாத்துக்குள்ளாகி காலத்தில் அழிகின்றன.மனிதர்களும் இவ்வாறே தனிதனியாகவே தோன்றுகின்றனர்.உலகில் தனிமனிதர்களின் முதல் தேவை பாதுகாப்பு.மனிதர்களின் ஒவ்வொரு தேவைகள்,தேடல்களிலும் பாதுகாப்பே முன்னிற்கின்றது.தங்களை சுற்றி கண்ணுக்கு தெரியாத பலவிதமான பாதுகாப்பு வேலிகளை ஒவ்வொரு தனிமனிதர்களும் அமைத்துகொள்கின்றனர்.மனிதன் ஒரு சமூக பிராணி. அவனது அடிப்படை முதல் தேவையான பாதுகாப்பை பரிணாம வளர்ச்சியின் பயனாக உணர்ந்தது தொடக்கம் அவன் கூட்டமாகவே வாழ தொடங்கினான். இவ்வாறு கூட்டமாக வாழ தொடங்கியதின் பின்விளைவுகளே சாதி,இனம்,மதம்,நாடு,சமூகம் என்று பலவிதமான பாதுகாப்பு வலயங்கள் மனிதர்களை சுற்றி அமைந்து கொண்டன.பின்னாட்களில் இதில் தனிமனிதர்களின் செல்வாக்கு அதிகமாக தொடங்கியது..இருந்தும் பெரும்பான்மை மக்கள் இன்று இவற்றையே தமது பாதுகாப்பு வலயங்களாக கருதி வாழ்ந்து வருகின்றனர்..

இருக்கும் இந்த ஒரு உலகம்,பல கண்டங்கள்,நூற்றுகணக்கான நாடுகள்,ஆயிரகணக்கான மாநிலங்கள்,லட்சகணக்கான கிராமங்கள் என்று எத்தனையோ விதமாக பிரிக்கப்பட்டே பார்க்கப்பட்டு வருகின்றது.நீங்கள் இந்தியாவில் ஒரு கிராமத்தில் இருந்தாலும் சரி,அமெரிக்காவில் ஒரு நகரத்தில் இருந்தாலும் சரி,ஆக மொத்தமாக நீங்கள் இந்த ஒரே ஒரு உலகத்தில்தான் இருக்கின்றீர்கள்.ஆனால் உங்களுக்கு இவ்வளவு வேறுபாட்டை கற்பித்தது யார்? யாருமில்லை நீங்களேதான்.உங்களின் பாதுகாப்பு வலயத்துக்கு எது அருகாமையில் இருக்கின்றதோ அதையே நீங்கள் தேர்வுசெய்துகொள்கின்றீர்கள்.ஆனால் அது உங்களை அடையாளமாக்கி கொள்கின்றது.கூடவே மற்றைய பாதுகாப்பு வலயங்களும் உங்களை சூழ்ந்துகொள்கின்றன..நீங்கள் பிறந்து சிறிதாக வளர்ந்து வருகையிலேயே அவை உங்களை தமது அடையாளமாக்கி பழக்கப்படுத்தி விடுகின்றது.ஆழமான மனசிறையில் மனிதர்களை அடிமைப்படுத்தி அவற்றை அடையாள பொருட்களாக்கி உலகம் முழுதும் கண்காட்சி நடத்திவருகின்றது.

உதாரணத்துக்கு – ஆசியகண்டத்தில் இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில் மதுரை மாவட்டத்தில் வசிக்கும் திரு.குமார் என்பவரை எடுத்து கொண்டால்.. ஐரோப்பாவுக்கும் ஆசியாவுக்கு ஒரு போர்/முறுகல்/விளையாட்டு போட்டி போன்ற எதாவது ஒன்று ஏற்படும் போது அவர் ஆசியாவை தனது பாதுகாப்பு வலயமாக்குவார்.

அதே சீனா/பாகிஸ்தான் ,,இந்தியாவோடு ஏற்படும்போது அவர் இந்தியன் என்ற அடையாளத்தை அணிந்து கொள்வார்,அதே இந்தியா,தென்னிந்தியாவோடு முறுகல் அடையும் போது அவர் தென்னிந்திய அடையாளத்தை எடுத்து கொள்வர்,அதே தென்னிந்தியா,தமிழ்நாட்டோட முறுகலயடையும் போது திரு குமார் அவர்கள் தமிழன் என்ற அடையாளத்தை எடுத்து கொள்வார்.இதே தமிழ்நாட்டுக்குள் முறுகலடையும் போது,சாதி என்று அடையாளத்தை உடுத்தி கொள்வார்,அதையும் தாண்டி முறுகல்கள் வளரும் போது அவர் ஊர்,குடும்பம் என்று அடுதடுத்த அடையாளங்களை தமது பாதுகாப்பு வலயமாக்குவார்.அடையாளங்கள் மாறுபடுகின்றன,ஆனால் தேவை ஒன்றுதான்.அதுதான் பாதுகாப்பு,இவை ஆயிரமாயிரம் வருடங்களாக காடுகளிலும் மலைகளிலும் கொடுமையான விலங்குகள்,மோசமான காலநிலைகள்,சக மனிதர்கள் என்று ஒட்டு மொத்தமாக தன்னை தவிர்த்து அத்தனை பேரிடமிருந்தும் எழும் பாதுகாப்பு அச்சுறுத்தல்களை மனதில் வைத்து உலக மனிதர்களின் கூட்டு மனோபலத்தால் உருவாகிய பாதுகாப்பு வலயங்கள்தான் இவை.

தனிமனிதர்களின் பாதுகாப்புக்காக உருவாகிய,உருவாக்கப்பட்ட அடையாளங்கள்,பாதுகாப்புவலயங்கள்,வரலாற்று ஓட்டத்தில் தமது இலக்கை மறந்து,பிரிகின்றனர்,தனிமனிதர்களின் முதல் தேவையான பாதுகாப்பே இவற்றின் அடிப்படையாக இருப்பதால்,தனிமனித பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான காரணிகள் இருக்கும் வரை இவை எதுவும் மறையபோவதில்லை,தனிமனித பாதுகாப்புக்கான அச்சுறுத்தல்கள் மறையும் போது இவையும் தானாக மறைய தொடங்கும்,தவிர இவற்றின் வேர் தெரியாமல்,வெறுமனவே சமூக ஏற்றதாழ்வு என்ற குறுகிய சிந்தனையில் இவற்றை ஒழிக்க நினைப்பது மடைமை,அவ்வாறு செய்வது தனிமனிதர்களின் பாதுகாப்பு உணர்வை அதிகரிக்க செய்து,இன்னும் தமது பாதுகாப்பு வலயங்களாக நினைத்து கொண்டிருப்பவற்றை பலமாக்கி கொண்டுவிடும்.அவ்வாறு பலமாக்கி கொள்ளும் போது,அந்த பாதுகாப்பு வலயங்களினால் உண்டாகும் பின்விளைவுகளும் அதிகரித்துவிடும்..

நன்றி

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: