Skip to content

நலமாக வாழலாம்…ஆனால் முடியாது? பகுதி 1

உளவியல் ஆலோசனைகள்

மனம்,உடல் ஆரோக்கிய ஆலோசனைகள் , பயிற்சிகள்

$19.00

இன்று எல்லோரது ஆசையும் ஆரோக்கியமாக நலமாக வாழ்ந்திட வேண்டும் என்பதே ஆகும். ஆனால் அது முடியுமான காரியமாக இல்லை என்பதே நிதர்சனமான உண்மை. ஏன் முடியாது? என்பதை, பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே உருவான திருக்குறளினூடு பார்ப்போம்.

நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்

வாய்நாடி வாய்ப்பச் செயல்

குணங்குறிகளால் நோயைத் துணிந்து, அதன் காரணத்தையும் தெளிந்து, தீர்க்கும் வழியையும் அறிந்து, செய்வகை பிழையாமல் மருத்துவம் செய்ய வேண்டும்.

குணங்குறிகளால் நோயை அறிந்து கொள்ளல், இன்று தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக குணங்குறிகளை விட விஞ்ஞான உபகரணங்களைக்கொண்டு துல்லியமாக நோயை நிதானித்துவிடலாம். அதன் காரணங்களையும் கண்டறிந்து கொள்ளலாம். ஆனால் இதன் மூலம் நோய்களை இலகுவாக மாற்றலாம் என்றால் அதுதான் முடியாது.

ஏன்?

நோய் நாடி நோய் முதல் நாடி அது தணிக்கும் வாய் நாடி..அதாவது நோய்களை தீர்கும் காரணங்களை கண்டறிந்து அவற்றை தணித்தல் வேண்டும். அது எம்மால் முடியுமா?

இப்போதுள்ள பெரும் சவால்கள், சலரோகம், பிரசர், கொலஸ்திரோல், இரைப்பு (ஆஸ்மா), தைரொயிட் குறைபாடு, அதிஉடற்பருமன், புற்றுநோய், மலட்டுத்தன்மை போன்ற தொற்றா நோய்களே. இவற்றுக்கான காரணங்களை பட்டியற்படுத்த முடியும். ஆனால்! அவற்றை உங்களால் நிறுத்தமுடியுமா? அல்லது குறைக்கத்தான் முடியுமா?

01. அதிகரித்த போட்டித்தன்மை, மனிதர்களுக்கிடையிலான ஒப்பீடுகள், ஆசைகள் இவற்றால் ஏற்படும் உள நெருக்கீடுகள்.

02. மாறுபட்ட உணவுப்பழக்கவழக்கங்கள்- அதிகிரத்த கோதுமைமா, சீனிபாவனை, செயற்கை உரம், மருந்து பயன்படுத்தப்பட்ட மரக்கறிகள், மரபுரிமை மாற்றம் செய்யப்பட்ட உணவுகள், செயற்கையான சுயூட்டிகள், நிறமூட்டிகள், உணவு பழுதடையாமல் பாதுகாக்கும் இரசாயனங்கள், அலுமினிய, பிளாஸ்ரிக் பாத்திரங்கள் போன்ற பல பல… இதனையே திருவள்ளுவர் …..

மாறுபாடு இல்லாத உண்டி மறுத்துண்ணின்

ஊறுபாடு இல்லை உயிர்க்கு

உடலுக்கு மாறுபாட்டைச் செய்யாத உணவையும், தன் மனம் விரும்பியபடி அல்லாமல்  உண்பானானால், அவனுக்குப் பிணிகளால் துன்பமில்லை, என்று கூறுகின்றார்.

03. தொழிநுட்ப வளர்ச்சியனால் ஏற்பட்ட உடல் உழைப்பின்மை.

இவற்றை நிறுத்த அல்லது மாற்றமுடியுமா? முடிந்தால் ஆரோக்கியம்..

தொடரும்…..

Dr T.Sutherman

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: