Skip to content

ஜோதிடம் அறிவியல் உண்மையா? இல்லையா?

எமக்கு தலைக்கு மேலாக சாதாரணமாக தெரியும் வானம் எமது அன்றாட வாழ்க்கையில் புதிரான ஒன்று,பூமியில் தாவரங்கள்,விலங்குகள் பிறக்கின்றன,வளர்கின்றன,வாழ்கின்றனர்,இறக்கின்றனர்.இடி இடிக்கின்றது.மின்னல் வெட்டுகின்றது.மழை பெய்கிறது.ஆறு பாய்கிறது.நாங்கள் இவற்றை எல்லாம் உணர்ந்து புரிந்துகொள்கிறோம்.ஆனால்,வானம் மிகவும் புதிரானது.இரு வகையான பொருட்கள் வானத்தினூடு பயணிக்கின்றன.ஒன்று ஒளி,மற்றையது இருள். ஒளியில் வானத்தின் ஒரு பக்கத்தையும்,இருளில் வானத்தின் இன்னொரு பக்கத்தையும் கண்டுகொள்ளலாம்.இரவில் வானத்தின் ஆழத்தை இலகுவாக அளந்துகொள்ளலாம்.

சூரியன்,கோள்கள்,நட்சத்திர கூட்டங்களின் இயக்கங்களும்,அவை பூமியிலுள்ள உயிரினங்கள் தாவரங்களின் செயற்பாடுகள் வாழ்க்கையில் எவ்வாறு செல்வாக்கு செலுத்துகின்றன என்பதை பற்றிய அறிவே வானவியல் , ஜோதிடமாகும்.. இன்று அறிவியல்பூர்வமாக ஜோதிடம் உண்மை என பல விஞ்ஞானிகள் நிறுவியுள்ளனர்.ஜோதிடமும் வானவியலும் வரலாற்றுக்கு புதிது அல்ல,அவை பண்டைய இந்தியா,எகிப்து,சுமேரியர்கள்,பபிலோனியர்கள்,கிரேக்கர்கள் முதற்கொண்டு இன்றைய ஐரோப்பியர்,இந்தியர் வரை பின்பற்றிவருகின்றனர்.

 

ஜோதிடம் உண்மையா என்று எனக்குள் வந்த சந்தேகத்தை எனக்குள் உள்வாங்கி ,பல ஆண்டுகளாக நான் உணர்ந்த விசயத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்ளுகிறேன்.ஜோதிடம் என்பது வேறு ஜோதிட பலன்கள் என்பது வேறு, கிரகங்களின் அமைப்பு, சக்தியை, நகர்வை சொல்வது வானவியல்,கிரகங்கள்,நட்சத்திரங்கள் பூமியில் உள்ள உயிரின‌ங்களை எப்படி பாதுகாக்கிறது,பாதிக்கிறது என்பதை பற்றி சொல்வது ஜோதிடம் ஆகும்.

 உதாரணமாக.. சூரியனை எடுத்துக்கொள்வோம் பல லட்சம் Km தூரம்  உள்ள சூரியனின் சக்தி இல்லாவிட்டால்  பூமியில்  சிறு பூண்டில் இருந்து மனிதர்கள் வரை உயிர்வாழ முடியாது.அனைத்திற்குமான அடிப்படை சக்தி சூரியனில் இருந்தே கிடைக்கின்றது.சந்திரன் தேய்ந்து வளரும் போதும், அமாவாசை,முழுநிலவு காலங்களில் மனிதர்கள்,விலங்குகள் ,கடல்கள்,ஆறுகளின் நடத்தை,செயற்பாடுகள் என்பவற்றில் மாற்றம் ஏற்படுகின்றது,இவ்வாறான நாட்களில் கங்கை ஆற்றில் நீர் ஏற்றம்,நீர்சுழற்சி அசாதரணமாக ஏற்படுகின்றது. உலகத்தில் 3/4 பங்கு நீரினால் ஆனது.உலகை போலவே விலங்குகள்,தாவரங்களிலும் நீரின் அளவே அதிகமாக உள்ளது.நீரே இயற்கையை இயக்கும் சக்தி.மேலும் அறிவியல் விதிகளில் அடிப்படையாக கூறப்படும் புறவிசை என்பதும் இந்த கோள்கள்,நட்சத்திர இயக்கங்கள் பூமியின் காந்தபுலத்தை எவ்வாறு பாதிக்கின்றன என்பதே ஆகும்.

உதாரணமாக ஒரு தெருவில் உள்ள ஒரே பல்கலைகழகத்தில் படித்த‌ இரு நல்ல வைத்தியர்களை எடுத்துக்கொள்வோம். ஒருவரிடம் மிக அதிகமாக மக்கள் செல்வார்கள் மற்றவரிடம் குறைவாக செல்வார்கள் ஏன்?,ஒரே ஆசிரியரிடம் ஒரே வகுப்பில் படித்த இரு மாண‌வர்கள் பரீட்சையில் வேறு வேறான புள்ளிகள் எடுக்கிறார்களே ஏன்? இவ்வாறு பல உதாரணங்களை நாம் எமது அன்றாட வாழ்விலிருந்து கற்றுகொள்ளலாம்..

இத்தனை வித்தியாசங்களிலிருந்து மனிதர்கள்,விலங்குகள்,என்பவற்றில் கோள்களின் மாற்றங்கள் தாக்கம் செலுத்துகின்றன என்பது புலனாகின்றது, இப்படி பூமியின் மீது செலுத்தும் மாற்றங்களை எமது முன்னோர்கள் பல வருடங்களாக கண்டு,ஆராய்ந்து,அது பூமியில் ஏற்படுத்தும் தாக்கத்தை கண்டறிவதற்காகவும்,முடியுமானவரை எதிர்வுகூறவும் ஒரு சமன்பாடாக உருவாக்கினார்கள். அச்ச‌மன்பாடே ஜோதிடம்(கிரகனிலை கட்டம் ) ஆகும்.

பூமியில் உள்ள ஒவ்வொரு படைப்புக்கும் வெவ்வேறான சமன்பாடுகள் ஆகும்,இச்சமன்பாடுகளின் தீர்வுகளே அவரவர்க்குரிய ஜோதிட பலன்கள் ஆகும்.ஜோதிடத்தை ஆணித்திரமாக வெளிப்படுத்துவதற்கு ஜோதிடம் உண்மை என்று ஒரு ஜோதிடருக்கு கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும்,ஜோதிடம் என்பது இயல்பான நிதர்சனமான இயற்கை (உண்மை), ஒரு கருத்தோ, நம்பிக்கை இவ்பிரபஞ்சத்தில் நிலைத்து நிற்பதற்கு அது உண்மையாக இருக்க வேண்டும், ஆகவே பல லட்சம் ஆண்டுகளாக ஜோதிடம் நிலைத்து நிற்பதற்கு காரணம் அதன் உண்மை தன்மை ஆகும்.

வானவியல் ஜோதிடம் தொடர்பாக மேற்கத்தேய அறிவாளர்களின் கருத்துக்கள்…

Astrology is one of the most ancient sciences,held in high esteem of old,by the wise and the great

⁃ Benjamin Franklin

There is no better boat than a horoscope to help a man cross over the sea of life

⁃ Varaha mihira

The stars above govern our condition,i was born sir. When the crab was ascending,All my affairs go backwards

⁃ Shakespeare

Millionaires don’t use astrology , Billionaires do

⁃ J.P.Morgan

I don’t believe in astrology,i am a Sagittarius and we are skeptical

⁃ Arthur.C.Clarke

Astrology is a language,if you understand this language,the sky speaks to you

⁃ Dane Rudhyar

The stars in the heavens sing a music,if only we had ears to hear

⁃ Pythagoras

A physician without a knowledge of astrology has no right to call himself a physician

⁃ Hippokrates

எமது வானவியல்,ஜோதிட குழுமத்தின் கட்டண சேவைகள்…

➡️ஜோதிட சேவைகள்,ஆலோசனைகள்

➡️திருமண பொருத்தங்கள்,தீர்வுகள்

➡️வாஸ்து சாஸ்திர சேவைகள்

➡️நல்வாழ்வுக்கான ஆலோசனைகள்

➡️பிரச்சினைகளுக்குரிய தீர்வுகள்

இன்றே தொடர்புகொள்ளுங்கள்🌕🌖🌗🌘🌑🌒🌓🌔

Yaalan9@gmail.com

+94755464964 Whatsapp | Viber | IMO | Skype

 

 

 

 

 

 

 

 

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: