Skip to content

நலமாக வாழலாம்…ஆனால் முடியாது? பகுதி 2

நாம் ஆரோக்கியமாக வாழ்வதற்கு, “உணவே மருந்து மருந்தே உணவு” என்ற அடிப்படையில் திருவள்ளுவர் மருந்து எனும் அதிகாரத்தில் கூறும் வழிமுறைகளைப் பார்ப்போம்.

“மிகினும் குறையினும் நோய் செய்யும் நூலோர்

வளிமுதலா எண்ணிய மூன்று.” – (941)

 

நோய்க்கு மருத்துவம் செய்யும் மருத்துவர்களான பலமருத்துவ நூல்களைக்கற்றவர்கள் நோய்கள் உண்டாவதற்கு காரணம் எமது உடலின் செயற்பாட்டு அலகுகளாக உள்ள வளி (வாதம்), அழல் (பித்தம்), ஐயம் (கபம்) ஆகியமூன்றினதும் சமநிலைக்குழப்பமே என்றும் அவ்வாறு சமநிலைக்குழப்பம் ஏற்பட காரணங்கள் எமது உணவிலும், செயல்களிலும் உள்ள கூடிக்குறைவே காரணம் என்கின்றனர். அதாவது நாம் எமது தேவைக்கு அதிகமாக உணவினை உட்கொள்ளும்போது உடற்பருமனானது அதிகரிக்கின்றது. தேவைக்கு அதிகமாக என நாம் கருதும்பொழுது எமது வயது, உயரம், வேலை, நோய்நிலைகள், காலநிலை, நாடு,ஆண் பெண் என்பவற்றை கவனத்தில்கொள்ளவேண்டும்.

 

உதாரணமாக சிறுவர்களுக்கு அதிகளவான புரதச்சத்து அவசியம், அதே நேரம் வளர்ந்தவர்களுக்கு சிறுவர்களுக்கு தேவையான அளவு புரதம் தேவையில்லை. சிறுவர்களில் உடல் வளர்ச்சி அதிகம் எனவே புரதம் அவசியம். அதேபோல் ஒரே வயது ஒரே உயரம் உள்ளவர்களில் அவர்கள் பார்க்கும் வேலைக்கு ஏற்ப உணவின் தேவை மாறுபடுகின்றது. உடல் உழைப்புள்ள ஒருவருக்கு அதிகளவான மாச்சத்து தேவைப்படுகின்றது. உடல் உழைப்பற்றவருக்கு, உடல் உழைப்புள்ளவருக்கு தேவையான அளவு தேவையில்லை. அதே அளவு உண்பாராயின் உடற்பருமன் அதிகரிக்கும்.

 

உடற்பருமன் என்பது தற்காலத்தில் உடற்திணிவுச்சுட்டெண் மூலம் (BMI -Body Mass Index) அளந்துகொள்ளப்படுகின்றது. உங்கள்து நிறையை கிலோகிராமில் எடுத்துக்கொண்டு  அதனை உங்களது உயரத்தின் (மீற்றரில்) வர்க்கத்தால் பிரிக்க வருவது ஆகும். பொதுவாக உடற்திணிவுச்சுட்டெண் 18-23 இனுள் இருத்தல் வேண்டும். 18 ஐவிட குறையினும், 23 ஐவிட கூடினும் ரோகங்கள் உருவாகும். .

.

.

தொடரும் . . .

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: