Skip to content

பிறப்பின் ரகசியமும் – ஜோதிடமும் ; சக்திதாசன்

இந்த மகாமாயை ஆகிய பிரபஞ்சத்தில் உள்ள பூமிப்பந்தில் ஒவ்வொரு வினாடியும் பலகோடி உயிரினங்கள் தோன்றி மறைகின்றன,பிறப்பு .இறப்பு  என்பது மகாமாயையின்  விளையாட்டு, இந்த விளையாட்டு இரவு பகலாக நடைபெற்று கொண்டிருக்கின்றது ,ஒரு மனிதனின் பிறப்பில் இருந்து இறப்பு வரை அவன் ஏதோ ஒரு புற விசைக்கு ஆட்பட்டு வாழ்ந்து மடிகின்றான் , உதாரணமாக, ஒரு மாட்டை 7m நீளமான கயிற்றில் கட்டினால் அது எவ்வாறு குறிப்பிட்ட சுற்றளவுக்குள் தான் எதுவும் செய்ய முடியுமோ அது போல் ,விளங்குவதற்கும் விளக்குவதற்கும் கஸ்டமான  பிறப்பு என்னும் நிகழ்ச்சியில் உள்ள  சில சூட்சுமங்களை இங்கு எனது அறிவுக்கு எட்டிய வகையில் ஜோதிடத்தில் சொல்ல வருகிறேன்,

மேலோட்டமாக பார்தோமானால் ஒரு ஆணும் பெண்ணும் சேர்ந்தால் கரு உருவாகி அது ஒரு குழந்தையாகும், குழந்தை பிறந்த நேரத்தை வைத்து  அல்லது கணவன் மனைவியின் மூச்சு வெளியேறும் அளவு, நாசி  என்பவற்றைக் கொண்டு அக்குழந்தை ஆணா, பெண்ணா, அத்துடன் அக்குழந்தை போகியா அல்லது யோகியா என ஆறிய முடியும் (ஓரை அறிதல்).

நம்மை வழிநடத்தும் கிரகங்கள் நம் பிறப்பையும் தீர்மானிக்கின்றன,எப்போது ஒரு ஆணுடைய விந்து பெண்ணுடைய கருப்பைக்குள் சென்று உருப்பெறுகின்றதோ அப்போது பிரபஞ்சத்தில் உள்ள கிரக அமைப்பு ஏற்ப உடல் உருவாகி குழந்தை பூமியில் பிறக்கின்றது சரி அந்த பிறப்பு எவ்வாறு தீர்மாணிக்கப்படுகிறது? எல்லோருக்கும் விரும்பிய நேரத்தில் குழந்தை அமைகிறதா? நற்குழந்தையாக அமைகிறதா? விரும்பிய‌ நிறம் ,புத்தியுள்ளதாக அமைகிறதா? பதில் இல்லை இல்லை இல்லை— ஆகவே ஒன்றும் எமது கையில் இல்லை.

 

கிரகங்கள் என்றால் என்ன? , உடனே கண்ணை மூடி கற்பனையில் ஒன்பது கிரகங்களை உருவகிக்க வேண்டாம் ,அல்லது வானத்தை அண்ணாந்து பார்த்து தேட வேண்டாம், ஒன்பது கிரகங்களும் எமது உடலுக்குள் தான் இருக்கின்றன. அதாவது மூச்சு வடிவில்/சுரப்பிகளின் வடிவில், ஒரு ஆணுடைய விந்துவின் நிலைத்தன்மையை தீர்மானிப்பது குரு,விந்துவின் அளவை தீர்மானிப்பது சுக்கிரன்,விந்துவின் வலிமை தீர்மானிப்பது குரு, அந்த விந்துவை பெண்ணுடைய சுரோணியத்தில் சேர்ப்பது ராகு, அதற்கு உயிர் கொடுப்பது கேது, ஆகவே இவ்வளவு கிரகங்களின் செயற்பாடு இல்லை எனின் படைப்பு இல்லை, த‌ற்போது விளங்குகிறதா ஏன் தமிழர்கள் ஆண்டாண்டு காலமாக அழியாமல் நிலைத்து நிற்கிறார்கள் என்று!

…. தொடரும்..

 

சுதுவை சக்திதாசன்

ஜோதிட சேவைகளுக்கு தொடர்பு கொள்ளவும்

+94755464964

Yaalan9@gmail.com

Yalaan.com

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: