பிரபஞ்சம் – மனித மனம் – இயங்கியல் பகுதி 2
மரத்தின் இலைகள் காற்றில் அசைகின்றன,அவற்றை காற்று அசைக்கின்றது எனின் காற்றை எது அசைக்கின்றது? காற்றை எது அசைக்கின்றதோ அதுவே இலைகளையும் அசைக்கின்றது.காற்றை அசைக்கின்ற எதுவோ அதுவே நெருப்பை எரிய செய்கின்றது,நீரை சுழற்சியடைய செய்கின்றது,உயிரின் ஏக்கங்கள்தான் இவற்றை அசைக்க செய்கின்றன,தாவர உடல்களின் உய்யும் உயிர்களின் ஏக்கம் மழையை வருவித்து தன் தேவையை பூர்த்திசெய்துகொள்ளும்,இல்லாமல் சூழவுள்ள மனிதர்களின் மனதில் தமது ஏக்கத்தை பதித்து அவர்களை தண்ணீர் விட வைப்பதன் மூலம் தமது தேவையை பூர்த்தி செய்துகொள்ளும்.இவ்வாறு இயற்கையின் அழைப்பை கேட்கும் திறனை ஆதி மனிதர்கள் அதிகமாக கொண்டிருந்தார்கள்.இவ்வாறான மனிதர்களின் வாழ்வில் இயற்கை ஒரு அங்கமாக இருந்தது என்றில்லாமல் இயற்கையில் ஒரு அங்கமாக இவர்கள் இருந்தார்கள்.இயற்கை சமனிலையுடன் இருக்கும் வரையே பூமி அமைதியாக இருக்கமுடியும்.பூமிபந்தில் 3/4 பங்கு நீராலானது.அதே போல் உயிர்களின் உடம்பிலும் முக்கியமாக மனிதர்களின் உடலிலும் நீரே அதிக பங்கினால் ஆனது.வான,கிரக நிலைகள்,சூரிய சந்திர கிரகணங்கள் எல்லாமே பூமியையும் உயிரினங்களையும் நீரினூடாகவே பாதித்து இயக்குகின்றது. மனதில் எழும் எண்ணங்களே மனித குலத்தை அன்றாட வாழ்க்கை.மனதில் நடக்கும் இரசாயன மாற்றங்கள் அனைத்திற்கும் அடிப்படை நீரில் ஏற்படும் மாற்றமே ஆகும்,பிரபஞ்ச இயற்கையை உள்ளிருந்தும் இயக்குவதும் இதே நீராகும்.இதுவே திண்மமாக,திரவமாக,வாயுவாக வடிவங்களை எடுத்து நெருப்பு,குளிர் என்பவற்றுக்கு அர்த்தங்களையும் கொடுக்கின்றது.
மனிதர்கள் இயற்கையை தவறாக கையாள முற்படும் போதும் நீர் சுழற்சியில் மாற்றம் ஏற்படுகின்றது.பிரபஞ்சத்தில் உள்ள எல்லாமும் எல்லாவற்றினூடு இணைந்தே உள்ளது.அந்த இணைப்பை இயற்கையினூடு இயக்குவது நீர்,உலக வரலாறு முழுவதுமே இயற்கையின் சமனிலைகளை செயற்கையாக மனிதர்கள் மாற்ற முனைந்த பொழுதெல்லாம் நீரே மனிதர்களை எறும்புகள் போன்று அழித்து இயற்கையை சமனிலைபடுத்துகின்றது,எதிர்மறை மாற்றங்கள் பிரபஞ்சம் முழுதிலும் எதிரொலித்து அதுவே மனித மனங்களில் இரசாயன மாற்றங்களை பாதித்து மனிதனுள் எதிர்மறைகளை தூண்டிவிடுகின்றது.இவ்வாறான எதிர்மறைகளின் உள்ளே தூண்டுவதன் மூலம் மைனஸ் * மைனஸ் இரு துருவ (உள்+வெளி)எதிர்மறைகளாக இயற்கையும் அதற்கு எதிரான உயிரிகளும் மோதி,நேர்மறை சமனிலையாகும்.இதுவே பிரபஞ்சத்தின் எளிய கோட்பாடாகும்,மனித மனம் என்பது சிறிய பிரபஞ்சம்,பிரபஞ்சம் என்பது பெரிய மனம்..இந்த சிறிய பிரபஞ்சம் பெரிய மனதில் எதிர்மறையை திணிக்கும் போது,அது தனக்கு தானே ஒரு எதிர்மறையை திணிப்பதாக அமைந்துவிடுகின்றது.பின்னர் அவ்விரு எதிர்மறைகளும் ஒன்றையொன்று சமன்செய்து நேர்மறை உருவாகுகின்றது.பிரபஞ்ச கோட்பாட்டில் உலகில் அசைவும் ஒவ்வொரு உயிர்களுக்குமான ஒரே சமன்பாடு இதுவேயாகும்.உங்கள் வாழ்வில் நீங்கள் எதிர்மறைகளான தீமையை வெளியே செய்யும் போது உங்களுக்குள் ஒரு எதிர்மறை பிரபஞ்சத்தால் விதைக்கப்படுகின்றது.பின்னர் அவ்விரு எதிர்மறைகளும் ஒன்றையொன்று தாக்கியழித்து நேர்மறை உருவாகின்றது. எதிர்மறை ” – ” என்ற குறியீட்டில் காட்டப்படின்… இரு எதிர்மறைகள் ஒன்றையொன்று தாக்கி நேர்மறை உருவாகுவதை ” + ” என்ற குறியீடு உணர்த்துகின்றது.
மனிதர்கள் உணர்ந்து கொள்ள வேண்டிய ஒரே உண்மை இதுவேயாகும்.இங்கு இருக்கு எல்லாமும் ஒன்றொடொன்று உள்ளும் வெளியுமாக இணைக்கப்பட்டு ஒன்றில் ஒன்று தங்கியுள்ளது.இவற்றில் செயற்கையாக ஏற்படுத்தும் மாற்றங்களினால் பாதிக்கப்பட போவதும் நாமேதான்.மனிதர்கள் தமக்கு மட்டுமே மனது இருக்கின்றது என்று தாங்களாக முடிவு பண்ணிகொள்வதே பல தவறுகளின் அடிப்படையாக அமைகின்றது.மனிதர்கள் தொடர்ந்து நல்லதை நன்மைகளை தம்மை சுற்றி விதைக்கும் போது அவை பரபஞ்ச விதைகளாக மாறி மனித இனத்துக்கு பெரிய அளவில் அன்பு விளைவுகளை அள்ளி கொடுக்கின்றது.அதுவே கெட்ட விதைகளை விதைக்கும் போது கொடுரமாக மாறி துன்ப சுமையில் ஆழ்த்துகின்றது.இயற்கையில் இணைந்து எல்லாவற்றுக்கும் அவற்றின் இயங்கியலுக்கு உண்டான வகையிலான மனது எல்லவிடத்திலும் இருக்கின்றது,அதை மனிதர்களால் உணரமுடியவில்லை என்பதற்காக அவை இல்லை என்று பொருளாகாது.இங்கு இயற்கை யாருக்கும் தனித்த உரிமை தருவதில்லை.தக்கன பிழைக்கும்,வலியவை வாழும் என்பதை கூட இயற்கை சங்கிலியே தீர்மானிக்கின்றது.இயற்கைக்கு மனிதர்களும் எறும்புகளும் ஒன்றுதான்.இயற்கை சமனிலையில் இணைந்து பல்லுயிரை போற்றி வாழும் வழை மனித இனம் பூமியில் நிலைத்திருக்கும்.அல்லாது தான்தோன்றிதனமாக இயற்கையை கையாளும் போது,இயற்கை மனிதர்களை,எறும்புகளை போன்று இரக்கமில்லாது கொன்று குவித்துவிட்டு..மீண்டும் பூ பூக்கும். அங்க அடுத்த ஆயிரம் இலட்ச வருடங்கள் அமைதியாக கருத்தரித்து தனது புதிய பரிணாமத்தை பூமியில் பிரசவிக்கும்…
நன்றி
யாழன்
ஆழமான கருத்து!!
LikeLiked by 1 person
நன்றிகள்
LikeLike