Skip to content

கனவுகள் நிழல் அல்ல நிஜம்_அனுபவத்தொடர்-பிரபஞ்சவி

இயற்கை ஒளித்து வைத்திருக்கும் அற்புதங்கள் பல கோடி ,அதில் ஒன்றுதான் மனித வாழ்கை, மனித வாழ்க்கை என்பது மிகவும் புதிரானதும் சுவாரசியமானதும் ஆன தொடர்ச்சியாகும் ,  நாளை என்ன நடக்கும் என்பதோ அல்லது  அடுத்த வினாடி என்ன நடக்கும் என்பதோ அறிய முடியாது. கனவுகள் அது ஓர் சாதாரண‌மான விசயம் அன்று அது இறைவனால் வழங்கப்படும் அற்புதமான கொடை ,எல்லாருக்கும் கனவு வருவதில்லை,கனவில் மனிதனின் கர்ம வினைகள் கழிகின்றன. காலங்களை கடந்தவர்கள் அல்லது காலங்களை கடக்க முயற்ச்சி செய்பவர்களுக்கு இறைவன் காட்டும் கண்ணாடியில் தெரியும் எதிர்காலத்தின் விம்பங்கள் தான் கனவுகள். நான் வாழ்கையில் கண்ட பல நூற்றுக்கணக்கான கனவுகளில் பல கனவுகள் உடனேயே நடந்துள்ளன.சில சில‌ காலத்திற்கு பிறகு நடந்துள்ளன. அவற்றில் சிலவற்றை  உங்களிடன் பகிர்ந்து கொள்கிறேன்.

 

2005 ஆண்டு என்று நினைக்கிறேன் Chartered Engineering படித்துக்கொண்டிருந்தேன்.அத்துடன் படிப்பித்தல் தொழிலையும் ஒரு பகுதியாக செய்துகொன்டிருந்தேன்.அப்போது ஒரு நாள் ஒரு மாணவ குடும்பத்துடன்,நான் மிகவும் கடுமையாக வாக்குவாதபடுவதாக கண்டேன். அதே போல் அடுத்த நாள் சிறு காரணத்திற்காக அவர்களுடன் வாக்குவாதம் நடந்தது,

2008-03-08 அன்று அதிகாலை 4-6 மணிக்குள் என்று நினைக்கிறேன் ஓர் அற்புதமான கனவு எனக்கு காட்டப்பட்டது. அதில் நான் கொழும்பு 2ல் உள்ள அலுவலகத்திற்கு செல்வற்காக‌ தெகிவளையிருந்து இருந்து ஏறிய பேரூந்து அதாவது காலி பாதையால் செல்லும் பேரூந்து தனது பாதையை மாற்றி ரொக்சிகாடினால் திரும்பி  வழமைக்கு மாறாக   கடற்கரை வழியாக செல்கிறது. விடிந்தவுடன் காலைகடனை முடித்துவிட்டு அலுவலகத்திற்கு புறப்படுவதற்காக பேரூந்தில் ஏறினேன்,கனவை மறந்து பயணப்பட்டேன், ரொக்சி காடின் வந்தவுடன் பேரூந்து கடற்கரையை நோக்கி திரும்புகிறது. திடுக்கிட்டேன் மார்பு படபடத்தது என்ன இது என்று நினைப்பதற்குள் பேரூந்து கடற்கரையால் பயணிக்க தொடங்கியது.செய்தி : சற்று நேரத்திற்கு முன் காலி வீதியில் இருந்து ராமகிருஸ்ணமிஷன் வீதிக்கு திரும்பும் பகுதியில் பாதையில் பெரும் பள்ளம் தோன்றியுள்ளது என்று பேருந்தில் உள்ள சகோதரமொழி வானொலி கூறியது.

அதே ஆண்டு இன்னொரு கனவில் ஒரு மனிதன் எனது பனத்தை பறிக்க முயல்கிறான். நான் அவனுட‌ன் கடுமையாக போராடி தப்பி வருகிறேன்,சில நாட்களுக்கு பிறகு வெள்ளவத்தை சந்தைப்பகுதியில் நான் பழங்கள் வேண்டுவதற்காக பணப்பையை எடுக்க ஒருவன் பறிக்க முயன்றான். நான் அவனிடம் கடுமையாக போராடி பணப்பையை மீட்டேன், ஆனால் அவன் ஓடிவிட்டான்.

2010.09.26 அன்று அதிகாலை 3 -5 மணிக்கு என்று நினைக்கிறேன்,நான் வேலை செய்யும் அலுவலத்தின் வாசல் கதவருகே மிளகாய் தூள் பரப்பப்பட்டுள்ளது போல் கனவு கண்டேன், அடுத்த நாள் நான் காலை அலுவலகத்தில் உள்ள எனது அறைக்கு செல்லும் போது  வாசல் அருகே சுவரில் உள்ள செங்கற்கள் உடைந்து கதவருகே சிவப்பு தூள் ஆக எங்கும் பரவி இருந்தது…

இது போன்று இன்னும் பல கனவு அனுபவ காட்சிகள் என்னுள் கொட்டி கிடக்கின்றன..தொடர்ந்து எழுதுவேன்..

                                                               தொகுப்பு  –  பிரபஞ்சவி  

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: