சிறுநீர் மகிமை – அமுரி பிரயோகம் – பண்டைய சிகிச்சை முறை
இயற்கை மறைத்து வைத்துள்ள அற்புதங்கள் ஏராளம்,அதில் மனித உடல் ஓர் பெரிய அற்புதம், ஆயிரக்கணக்காண நரம்புகள்,எலும்புகள் ,தசைகள் ,ரத்தம் என பல பகுதிகள் கொண்டது. இவ் உடல் செயற்படும் முறைகளை நாம் முழுவதுமாக புரிந்துகொள்வது மிகக் கடினம் ஏனெனில் இயற்கை அதை நுட்பமான முறையில் தன்னுள் மறைத்துள்ளது,பல லட்சம் ஆண்டுகளாக உள்ள இந்த பூமியில் கண்டுபிடிக்கபட்ட பல தரமான விசயங்கள் கால ஓட்டத்தில் மறைந்துள்ளன அல்லது மறைக்கப்பட்டுள்ளன.சிறு நீர் மருத்துவமும் அவ்வாறு மறைக்கப்பட்டது.பல வருடங்களுக்கு முன் இம் மருத்துவம் உலகம் முழுவதும் பயன்பாட்டில் இருந்துள்ளது. மேலை நாட்டு மருத்துவம் படித்தவர்கள் இதை பெரிய அளவில் ஆராய்ந்து ஏற்றுகொள்ள முன்வரவில்லை.ஆனால் உண்மை நீண்ட நாள் உறக்கம் கொள்வதில்லை.
விலங்குகள் இயல்பாகவே இயற்கையாக சிறுநீர் சிகிச்சையை பின்பற்றுகின்றன,நோயுற்ற காலங்களில், நாய் ,மாடு என்பன் தங்கள் குறியை நக்கி சிறுநீரைப் பருகுவதைக்காணலாம். ஏன் சிரங்கு.நீர்சிரங்கு வந்தால் ,வயதானவர்கள் மூத்திரத்தை அதன் மேல் அடிக்க சொல்வார்கள்.சிறுநீரின் மகத்துவம் அறிந்த மேலை நாட்டவர்கள் தற்போது சிறுநீரில் இருந்து குளிக்கும் சவர்காரம் (soap,shampoo),உடல் பூச்சுக்கள் (body cream) என்பவற்றை தயாரிக்கிறார்கள்.
சிறுநீர் ,பெருநீர், சிவாம்பு அமரி என பல பெயர்களில் அழைக்கப்படுகிறது,உடல் நலம் அற்றவர்கள் உடனடியாகவே எவ்வித தயக்கமும் இன்றி சிறுநீர் சிகிச்சையை ஆரம்பிக்கலாம். சிவபெருமான் இந்த சிறுநீரை ‘சிவாம்பு’ என குறிப்பிடுகிறார்.எமது தமிழ் ஞானி , திருமூலர் திருமந்திரத்தில் இதை ” அமரி” என்று தனது பாடல்களில் குறிப்பிடுகிறார்..
“உடலில் கிடந்த உறுதிக் குடிநீர்க்
கடலிற் சிறுகிணற்று ஏற்றம் இட்டால் ஓக்கும்
உடலில் ஒருவழி ஒன்றுக்கு இறைக்கில்
நடலைப் படாதுயி நாடலும் ஆமே”
சிறுநீரில் உடலுக்கு தேவையான 20 மேற்ப்பட்ட சத்தான தாதுக்கள் உள்ளன என கண்டுபிடிக்க பட்டுள்ளன,
• யூரியா நைட்ரயன்
• யூரியா 48%
• யூரிக் அமிலம்
• அமினோ நைட்ரஜன்
• அம்மோனியா நைட்ரஜன்
• சோடியம்
• பொட்டாசியம்
• கால்சியம்
• கிரியேட்டின் நைட்ரஜன்
• கிரியேட்டின்
• யூரிக் அசிட் நைட்ரஜன்
• மெக்னீயம்
• க்ளோரைடு
• அமிலங்கள் மற்றும் இன்னும் பல
எல்லா நோய்களையும் குணப்படுத்தக்கூடிய மருந்து சிறுநீர்,மருத்துவர்களால் மற்றமுடியாது என கைவிடப்பட்ட நோய்கள் ஆன,புற்றுநோய், சக்கரைநோய்.வாதம்,காசநோய், எல்லாவிதமான தோல் நோய்கள் ,வைரசால் பரவும் நோய்கள்,என்னும் பல தீராத நோய்கள் போன்றவற்றை தகுந்த முறையில் சிறுநீரை பாவிப்பதன் மூலம் குணமாக்கலாம். இயல்பாகவே சிறுநீர் தெய்வீக ஆற்றல் பெற்றது.காட்டுப் பூனையின் மலமே வாசனைமிகுந்த புனுகு ஆவது போல அருவருத்து ஒதுக்கும் சிறுநீர் ஓர் அருமருந்து ஆகும்.சிறுநீரை பாவிப்பதால் உடல் ஆரோக்கியம் மட்டும் அல்லாது இந்திரியங்களை கட்டுப்படுத்தி மனதை ஒன்று படுத்தி யோகத்திற்கும் உதவுகிறது. ‘அரவக்கடி யகலவங்கு சிறுநீர் சிரங்கை, பரவக்குடி விஷம்படும்”விஷம்படும்” என்னும் சித்தர் பாடலின் பொருள்-பாம்பு கடித்தவுடன் சிறுநீரைக் குடித்தால் பாம்பின் விஷம் இறங்கி விடும். சித்தமருத்துவத்திலும் அமுரி பிரயோகம் பற்றி சொல்லப்பட்டுள்ளது, அமுரி பிரயோகத்தால் இந்திய பிரதமர் மொரார்ஜி தேசாய் தொண்ணூறு வயதிலும் மிகவும் சுறு சுறுப்பாக வேலை செய்தார்,பலர் தற்போதும் இந்த சிறுநீர் பிரயோகம் செய்து நலமோடு வாழ்கிறார்கள்
தாமர் தந்திரா என்ற நூலின் ஒரு பகுதியான ஷிவாம்பு கல்பத்தில் 107 சுலோகங்களில் ,சாட்சத் அந்த சிவபெருமானே பார்வதி தேவிக்கு சிறுநீரின் மகிமை பற்றி உபதேசித்துள்ளார் என்று கூறுகின்றன.
சிறுநீரை எத்தனை மாதங்கள் தொடர்ந்து குடித்தால் என்ன என்ன பலன் என்று குறிப்பிடுகிறார்
1 மாதம் – உடலின் உட்புறம் ஸ்படிகம் ஆகிறது
2 மாதம்- அறிவு நுட்பமாகிறது
3 மாதம் – உடலில் உள்ள வியாதிகள் அறவே அழிக்கப்படுகின்றன
5 மாதம் – ஞான திருஷ்டி உண்டாகிறது
6 மாதம் – சாஸ்திர அறிவும்,புத்திசாலி ஆவான்
7 மாதம் – சக்தி வாய்ந்தவன் ஆவான்
8 மாதம் – தங்கம் போல் பிரகாசம் ஆவான்
9 மாதம் – கவலைகளில் இருந்து விடுபடுவான்
1 வருடம் -சூரியனுடைய பிரகாசம் அடைவான்
2 வருடம் ,3 வருடம்,4வருடம்,5வருடம்,6வருடம் பஞ்ச பூதங்களுக்கு அதிபதியாவன்
7 வருடம் – நான் எனும் அகங்காரம் போய்விடும்
8 வருடம் – மஹான் ஆகிவிடுவான்
9 வருடம் – பிறப்பு இறப்பில் இருந்து விடுபடல்
சிறுநீரை பலவழிகளில் சிகிச்சைக்கு பயன்படுத்தலாம் ,அதில் சிறுநீரை குடித்தல், மசாஜ் செய்தல் என்பன மிகவும் பிரசித்தமானவை,ஆகவே தகுந்த முறையில் சிறுநீரை பயன்படுத்தி வாழ்வில் வளம் பெறுவோம்.
சுதுவை – சக்திதாசன்
முறையான சிகிச்சை,ஆலோசனைகள் பெற தொடர்பு கொள்ளுங்கள்…
+94755464964 Whatsapp | Viber | Skype
Yaalan9@gmail.com
Yalaan.com
அருமையான விடயம்-நன்றி
LikeLike