Skip to content

குடிநீரும் யாழ்ப்பாணமும் : சக்தி தாசன்

உலகத்தின் பெரும் பகுதி நீரால் ஆக்கப்பட்டுள்ளது,கடல்கள் , ஏரிகள் ,குளங்கள்,ஆறுகள் என எங்கும் நீர் நீக்கமற நிறைந்துள்ளது. மனிதர்களுக்கும் ஏனைய உயிரினங்களுக்கும் தூய்மையான குடிநீர் இன்றியமையாதது,ஐம்பூதங்களில் மிகவும் சக்தியுள்ளதும் முதன்மையானதும் ஆன நீர் எதையும் ஆக்கவும் அழிக்கவும் வல்லது. 2025 ம் ஆண்டு முடிவடைவதற்குள் பூமியில் உள்ள மக்கள் தொகையில் அரைவாசிக்கு மேற்பட்டோர் நீரை அடிப்படையாக கொண்ட வியாதிகளுக்கு உட்படுவர் என சில சுயாதீன ஆராய்சியாளர்கள் கணித்துள்ளனர். பூமிப்பந்தின் 71% நீரால் சூழப்பட்டுள்ளது அத்துடன் அன் நீரின் பெரும் பகுதி உப்பு நீராகும். உலகில் உள்ள  3% நன்னீரில் 0.04% நன்னீரே குடிப்பதற்கு உகந்தது. 

இலங்கை தீவில் உள்ள 25 மாவட்டங்களில் யாழ் மாவட்டம்  ஆனது மூன்று பக்கம் கடலால் சூழப்பட்டதும் சில தீவுகளும் கொண்ட ஒரு பிரதேசம் ஆகும். மாவட்டத்தின் சனத்தொகை  அன்னளவாக 600,000 , இம் மாவட்டம் ஆனது தற்போது எதிர்நோக்கும்  சாவல்களில் ஒன்று குடி நீர் பிரச்சனை. வருடத்தின் மூன்று மாதங்கள் ( ஆடி,ஆவணி,புரட்டாதி) பகுதிகளில் கடும் வெப்பமும் குடிதண்னீர் பிரச்சனையும் தலையெடுக்கும்.

சுமார் 40,50 வருடங்களுக்கு முன் மாவட்டத்தின் பெரும் பகுதிகளில் நன்னீர் வளம்  காணப்பட்டது தீவுப்பகுதிகள் உட்பட. ஆனால் கால ஓட்டத்தில் மக்களின் முறையற்ற நடவடிக்கையால் நன்னீர் வளங்கள் சிதைவடைய ஆரம்பித்தன. நவீனயுகத்திற்கு ஏற்றாப்போல் வாழ வேண்டும் என நினைக்கும் பிரதேச மக்கள் நன்னீர் வளங்களை பற்றி அக்கறை கொள்வதும் இல்லை யோசிப்பதும் இல்லை

மாவட்டத்தில் நன் நீர் பெறுகையானது  கிணறுகள்,சிறு குளங்கள் என்பவற்றிக்கூடாக கிடைக்கிறது. கிணறுகளில் ,வேளாண் கிணறுகள், குழாய் கிணறுகள் மற்றும் துளை கிணறுகள் என மூன்று வகையான கிணறுகள் பயன்பாட்டில் உள்ளன. இந்த கிணறுகளிலிருந்து வரும் நீர் உள்ளூர்மக்களின்  குடி நீராகவும் மற்றும் விவசாய நீர்பாசண நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படுகிறது.மாவட்டத்தில் உள்ள சுமார் 108000 கிணறுகளில் சுமார் 35000 கிணறுகள் தகுந்த பராமரிப்பு இன்றி,பாவனையின்றி  கைவிடப்பட்டன  அல்லது குப்பை கொட்டும் இடமாகின, இதனால் அயலில் உள்ள மற்றைய நன்னீர் கிணறுகள்,சிறு குளங்கள்,விளைநிலங்கள் உவர்தன்மையுடையதாக மாற்றம் அடைகின்றன.

குழாய் கிணறுகள் (16-25) செ.மீ விட்டம்)  இரண்டாம் நீர்ப்படையை அடைய அதாவது சுண்ணாம்பு மற்றும் மணற்கற்கள் ஆகியவற்றின் ஆழமான நீர் பிடிப்பை அடைய சுமார் 60மீ ஆழம் தோண்ட வேண்டியுள்ளது,குழாய்  கிணறுகளை கண்மூடித்தனமாக தோண்டுவதால், உப்பு நீர் சாதாரண நன் நீர் மட்டத்தை அடைவதால் நன் நீர் விரைவாக உப்பாகின்றது. மாவட்டத்தில் உள்ள எமது முன்னோர்கள் அமைத்த பல சிறு நீரேந்தும் குளங்கள், உவர் நீர் தடுப்பு வேலிகள் தற்போது காணமுடியாது உள்ளது.குளங்கள் இருந்த இடத்தில் கட்டிடங்கள் முளைத்துள்ளன.அத்துடன் இயற்கையாக நிலத்தடி நன்நீரை பாதுகாக்கக்கூடிய‌ வேலிகள்,வேலித்தடுப்புகள் மறைந்து மதில்கள் வரத்தொடங்கியுள்ளன‌,மாவட்டத்தின் பல லட்சம் மக்களின் இருப்பானது நன்னீர் வளம் பாதுகாப்படுவதிலேயே தங்கியுள்ளது என்பதை படித்தவர்களும் பாமர மக்களும் மறந்து விட்டார்கள்.

யாழ்ப்பாண தீபகற்பத்தில் நீர்வழங்கல் மேலாண்மைக்கு பொறுப்பானவர்கள்,தீபகற்பத்தில் பயன்படுத்தக்கூடிய நன்னீரின் ஆழத்தை வரைபடமாக்க உடனடியாக நடவடிக்கை எடுத்து,  புதிய கிணறுகளின் ஒழுங்குமுறைக்கு வழிகாட்டும் தகவல்களை சேகரித்தால் மக்களுக்கும் மிகவும் நன்மை பயக்கும்.  போதுமான அளவு புதிய நீர் பெறப்படுவதோடு,விளை நிலங்கள் உப்பாக கூடிய அபாயத்தில் இருந்து காப்பற்றபடும், அல்லாவிடில் இது யாழ்ப்பாண தீபகற்பத்தின் எதிர்கால வாழ்வாதாரத்தை பாதிக்கும். உடனடி நடவடிக்கையால் ஒரு பெரிய சுற்றுச்சூழல் பேரழிவைத் தடுக்கலாம்.

யாழ்ப்பாணத்துக்கான குடி நீர்த் தேவை என்பது பெய்யும் மழை வீழ்ச்சியின் 2%,மழை அரைவாசி பெய்தால் குடி நீர் தேவை 4%,குடா நாட்டில் பெய்யும் மழை நீரில் 75% வீனே கடல்லோடு கலக்கின்றது. சொற்பநீரே சேமிக்கப்படுகிறது.யாழ்ப்பாணத்திற்காண குடி நீர் தேவையை பூர்த்தி செய்ய புத்திசாலித்தமான‌ ஒரே வழி நிலத்தடி நீரை வளமானதாக மாற்ற வேண்டும்.ஆறுமுகம் திட்டம் என்பது குடா நாட்டு நிலத்தடி நீரை செழுமையாக்கி குடிதண்ணீர் ஆக்கக்கூடிய திட்டம். சிறு கால இடைவெளியில் உவர் நீர் கிணறுகளை நன் நீர் கிணறுகள் ஆகவும்,உவர் நிலங்களை நன் நிலங்கள் ஆகவும் மாற்ற கூடிய திட்டம்.

 5-6 வருடங்களுக்கு ஒரு தடவை நிச்சயமின்றி பொழியும் பெரு மழையை நம்பி  இரணைமடுவில் இருந்து குடிதண்ணீர் கொண்டுவருவம்.அல்லது கடல் நீரை குடிநீராக்கி தருவோம் என்பது எமது வளங்களை திறம்பட நிருவகித்து எமது குடிதண்ணீர் தேவையை தீர்க்காமல்,மற்றவர்களின் வளங்களை சுறண்ட நினைப்பது மட்டுமல்லாது அப்பாவி மீனவர்களின் வள‌ங்களை அழிக்க முற்படுவது எவ்வகையில் நியாயம்,ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம் உலக இயக்கத்தை தீர்மானிக்கும் பெரும் சக்தி நீராகும் (72%),எமது உடம்பில் இருந்து .பிறப்பை (விந்து நீரில் தான் பிரயாணம் சியும்) தீர்மானித்து,பாவங்களை கழுவுவது (கங்கை நதி) வரை, அத்துடன் பல அரசுகள் சரிந்ததும் நீரால் தான் உதாரணங்கள், சரஸ்வதி நதி (பாரத யுத்தம்), இலங்கை (மாவிலாறு தொடங்கி——-) .ஆகவே நாம் நீரை தகுந்தமுறையில் பாதுகாத்து ,வீணாக்காமலும்,அசுத்தமாக்காமலும் நடப்போமாக‌.

நல்ல சிந்தனையுள்ளவர்களின் நேர் எண்ணங்கள் ஒற்றைப்புள்ளியில் குவியும் போது நல்லதே நடக்கும்.

நன்றி…

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: