Skip to content

அடிமை அதிகாரம் ஒன்று : யாழன்

உலகில் இன்று மக்கள் அதிகமாக குடும்பமாக டீவி பார்ப்பது அதிகரித்து வருகின்றது.தமிழர்கள் தாண்டி உலகம் முழுவதுமாக பிக்பாஸ் என்ற நிகழ்ச்சி வேறு வேறு பெயர்களில் ஒளிபரப்பி கோடிக்கணக்கான ரசிகர்களை தன் பக்கமாக இழுத்து வைத்துகொண்டுள்ளது.மனித மனங்களுக்கும் டீவிக்குமான தொடர்பு மிகவும் அபூர்வமானது.அசைவை காட்டும் பொருட்களுக்கு உயிருண்டு என்ற மனித மனக்கணக்கின் பல்லாயிரம் வருட கணக்கை அடிப்படையாக வைத்தே,மனிதமனம் டீவிக்கு தனது மனதை பறிகொடுத்து சரணடைந்துவிடுகிறது.தொலைதூரத்துக்கு ஒளி அலைகளை அனுப்பவேண்டி இருந்த இராணுவ நோக்கங்களுக்காகவே ஆரம்பத்தில் டீவி பயன்படுத்தபட்டு வந்தது.. ஒவ்வொரு சமூகத்தில் சினிமா சார்ந்து பரீச்சயமாக இருக்கும் சில நபர்களை ஒரு வீட்டினுள் குறிப்பிட்ட நாள்கள் வரை தலக வைத்து,அவர்களை கமரா கொண்டு அன்றாட வாழ்க்கை,செயற்பாடுகளை கண்காணித்து அதை ஒரு நிகழ்ச்சியாக மக்களுக்கு வழங்கப்படும் போது..அந்த நிகழ்ச்சியை அதிகளவிலான மக்கள் விரும்பி பார்க்கின்றமைக்கு பின்னால் இரண்டு காரணங்கள் உண்டு…

ஒன்று இத்தகைய நிகழ்ச்சிகளை குறிப்பாக விரும்பி பார்ப்பவர்கள் நிஜ வாழ்க்கையில் தாம் கண்காணிக்கப்படுகின்றோம் என்பதை நனவு மனதில் உணர்ந்துள்ளார்கள்..கூடவே அவர்கள் அந்த கண்காணிப்பை தம்மை அறியாமல் காலப்போக்கில் அதிகமாக விரும்புகிறார்கள்.அத்தகைய கண்காணிப்பை தமக்குள்ளும்,தாம் சார்ந்த சமூகத்துக்குள்ளும் அனுமதிக்கின்றார்கள் என்பதும்.அது சார்ந்து இவ்வாறான கண்காணிப்பு உலகளாவிய ரீதியில் மக்கள் மீது தொடர்ச்சியாக பிரயோகிக்கப்பட்டுவருகின்றது என்பது புலனாகின்றது.மக்களை கடுமையாக கண்காணித்து கொண்டே அதை பொழுதுபோக்கு நிகழ்வாக டீவியில் மக்களுக்கே காட்டி,அதனை ஒரு நகைச்சுவையான ஒரு விசயமாகவும்,இதன் பின்னால் எந்த தீய நோக்கங்களும் இல்லை அதே மக்கள் மனதில் அவர்களை அறியாமல் பதியவைத்து அடிமைகளை உருவாக்குகின்றனர்.

உலகில் பிறந்து வாழும் எந்த மனிதர்களுக்கு இன்னொரு மனிதர்களை இவ்வளவு நுணுக்கமாக கண்காணிக்க வேண்டிய தேவை ஏற்படபோவதில்லை.திரும்பி பார்க்கும் இடமெல்லாம் பாதுகாப்பு என்ற போர்வையில் கமராக்கள்,அவற்றை தனியார்களும் பயன்படுத்த ஊக்குவிக்கப்படுகின்றனர்.பாதுகாப்பு என்ற காரணம் சொல்லப்பட்டு ஒரு பக்கம் விற்பனை மறுபக்கம், ஒவ்வொரு தனிமனிதர்களும் அடி முதல் நுனி வரை கண்காணிக்கப்படுகிறார்கள்.அது போக கையில் மொபைல் என்ற ஒரு விலங்கை போட்டு முடிவிலி வரை பார்த்து பகுத்தறியும் திறன் கொண்ட மனித இனத்தை வெறும் 5 இன்ச் மொபைல் ஸ்கீரினுக்குள் அடங்கி வாழபழக்கப்படுகின்றனர்..எல்லா தேவைகளையும் மொபைலுக்குள்ளால செய்ய நிர்பந்தித்து சமூக கட்டமைப்புக்களை சொந்த மக்களை வைத்தே அந்தந்த இனங்களுக்கு பாதகமான விளைவுகளை தொலைநோக்கில் தரும்படியாக திணிக்கப்படுகின்றது.மிஷின்களுக்கு மனித மனத்தை கொடுத்து பரீட்சீத்து பார்க்கும் வேளையில் மற்ற பக்கத்தில் மனிதர்களின் சிந்தனை திறனை மழுங்கடித்து,அவர்களை மிஷின் போன்று உருவாக்கும் வேலைகளும் நடந்துவருகின்றன.மனிதனாக பிறந்து 4 வருடத்தில் அவர்களை பாடசாலை கட்டமைப்புக்குள் அடைத்து 12 வருடங்களுக்கு அவர்களுக்கு பாடம்,பயிற்சி என்ற பெயரில் அதிகாரத்துக்கு கட்டுப்பட்டு,சுயாதீனமான சிந்திக்க தெரியாத,தலைமுறைகளை உருவாக்கி அவர்களுக்கு சமூக அந்தஸ்து என்று போலி விம்பத்தை காட்டி ஏமாற்றி,கிழமைக்கு 40 மணித்தியாலங்கள்,மாத சம்பளத்துக்கென அடுத்த 40 வருடங்களுக்கு மனித இனத்தை வாடகைக்கு எடுத்துவிடுகிறார்கள்..

எதுவுமே அறியமுடியாமலும்,வாழ்வு எதை நோக்கி போகின்றதென்ற விழிப்புணர்வுமில்லாமல்,முடிந்து கொண்டிருக்கின்றது மனித இனத்தின் சில தலைமுறைகள்…

நன்றி

3 Comments »

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: