Skip to content

வெற்றிகரமான வாழ்க்கை – அதிகாரம் II – யாழன்

இன்றைய வேகமான உலகில் நாட்கள்,மாதங்கள்,வருடங்கள் வேகமாக ஓடி கொண்டிருக்கின்றன.காரணம் மனித மனம் வேகமாக ஓட நிர்பந்திக்கபடுகின்றது.உலக சனத்தொகையில் 97% மக்கள் மீதி 3% சதவீதமானவர்களுக்கு உழைத்து கொடுப்பதற்காக அன்றாடம் ஓடிகொண்டிருக்கின்றனர்.அவ்வாறு ஓட வைக்கப்பட்டுகொண்டிருக்கின்றனர்.சமூக அந்தஸ்து என்ற மாயையில் சிக்கி தமது வாழ்வை தொலைத்து அலைகின்றனர்.மக்களை யாரும் திட்டமிட்டு அடிமைப்படுத்தப்படுவதில்லை.உளவியல்படி மனிதமனம் தனது தேவைகளை நிறைவேற்ற இருக்கும் வழிகளில் இலகுவான வழியொன்றையே தேர்ந்தெடுத்து கொள்ளும்.உலகில் பிறக்கும் மனிதர்கள்,உணவு உடை உறையுள் என்ற தமது அடிப்படை தேவைகளை தமது சொந்தமாக நிறைவேற்ற தவறும் போது அவர்கள் இன்னொருவரின் பிடியில் சிக்கிகொள்கிறார்கள்.இவ்வாறாக சிறிதுசிறிதாக தமது வாழ்வை ஒரு வளையத்தினுள் சிறுமைப்படுத்திகொள்கின்றனர்.காலம்போக்கில் அவ்வாறே பழக்கப்பட்டுகொண்டு அதற்காகவே வாழ தொடங்குகின்றனர்..

97% மக்கள் 3% மக்களுக்காகவே வேலை செய்கின்றனர்.அவர்களின் வாழ்க்கை காலையில் ஐந்து மணிக்கெல்லாம் எழுந்து உடற்பயிற்சி செய்து,முறையே தியானம்,யோகா,நல்ல புத்தக வாசிப்பு என்று ஒவ்வொரு நாளையும் முதலிலும்,வெற்றிகரமாகவும் ஆரம்பிக்கின்றனர்.3% அவர்கள், அங்கேயே இந்த 97% மக்களை வென்றுவிடுகின்றனர்.ஆறுமணிக்கு பின்னர் தூக்கம் கலையாமல் அவசரமாக எழும்பி,கிடைச்சதை சாப்பிட்டு விட்டு நேரத்தின் பின்னால் ஓட ஆரம்பிக்கும் 97% மக்கள் கூட்டம்,அன்றைய நாள் முழுவதும் ஓடி,களைத்து,இரவு நிம்மதியான தூக்கமில்லாமல்,விடிய விடிய தூங்கி மறுநாள் என்று தமது வாழ்வையே அடகுவைத்து அதில் மாத பணம் பெற்று வாழ்ந்துவிட்டு போகின்றனர்.இவ்வுலகில் உள்ள அனைவருக்கும் 24 மணித்தியாலங்கள் சமமாகவே கொடுக்கப்பட்டுள்ளது.அந்த 24 மணித்தியாலங்களில் எத்தனை மணிநேரத்தை நாம் எமக்காக பயன்படுத்துகிறோம் என்பதை பொறுத்து,எம்முடைய வெற்றி அமைகின்றது.97% மக்கள்கூட்ட நெரிசலில் இருந்து வெற்றிகரமான 3% மக்கள் கூட்டத்துக்கு செல்வதற்கான வாசல் எப்பொழுதுமே திறந்தே காணப்படுகின்றது.

3% வெற்றிகரமான மக்கள் என்று இங்கே குறிப்பிடப்படுவது,பெரும்பணத்தை உழைத்து குவித்தவர்கள் என்ற பொருளில் வராது.

தமக்கு பிடித்தவற்றை,எது இல்லாமல் தாம் வாழமுடியாது என்று நினைபவற்றை இலக்குகள் ஆக்கி,அதற்கு தேவையான திறமைகளை வளர்த்து கொண்டு இலக்குகளை அடைய பொருத்தமான நபர்களை அடையாளம் கண்டு,தம்மால் எவை எப்போது முடியும்? எதை முதலில் செய்வது? என்று அவர்கள் மனம் முழுவதும் அதை சுற்றியே ஆரம்ப நாட்கள் முழுவதும் வந்து கொண்டிருக்கும்..அவர்கள் சாப்பிடும் போதும்,உண்ணும் போதும்,நடக்கும் போதும்,நாள் முழுதும் அதே சிந்தையிலயே கழிப்பார்கள்..அவர்கள் பணத்துக்கு பின்னால் ஓடுவதில்லை.பணம் தம்மிடம் வர என்ன செய்யவேண்டும் என்று தேடி அவற்றை சரியான நேரத்தில் சரியாக செய்துகொள்கிறார்கள்.பணம் அவர்களை தேடி சென்று சரண்டைந்துகொள்கிறது.

உதாரணமாக இன்று முதல்தர உலக பணக்காரனாக இருக்கும் அமேசான் ஜெவ்ப் பெசோஸின் நிகர சொத்து மதிப்பு 167 பில்லியன் டாலராகும்.ஆனால் அவரின் அமேசான் நிறுவனத்தின் நிகர சொத்து மதிப்பு 1000 பில்லியன் டாலர்களாகும்.அப்படி என்றால் ஜெவ்ப் மற்றவர்களை,அவரின் கீழ் தொழில் செய்யும் ஒரு கூட்டத்தை 833 பில்லியன் டாலர்கள் ஆக்கியதன் மூலமே தனக்கான அந்த 167 பில்லியன்களை உழைத்து முதல் தரத்தில் உள்ளார்..இதுவே அடிப்படை விதியாகும்.நாம் எவ்வளவு பேர்களை மேலேதூக்கி விடுகின்றனமோ,அவ்வளவுக்கு அவ்வளவு நாம் மேலே உயர்ந்து கொள்ளலாம்..ஒருபோதும் மற்றவர்களை தாழ்த்தி,குழிபறித்து நாம் முன்னுக்கு வரமுடியாது.மற்றவர்களுக்கு குழிபறிக்க நினைப்பவர்கள்,தமக்கு சேர்த்து அப்போதே ஒரு குழியை பக்கத்தில் பறித்து வைத்துகொள்வது சிறந்தது,எப்படியும் நீங்கள் அங்கேதான் வரபோகின்றீர்கள்…

நன்றி –

நீங்கள் வசிக்கும் இடத்தில் சொந்த தொழில்

தொடங்க விரும்புகின்றவர்கள்,ஏற்கனவே தொழில் செய்ய ஆரம்பித்து அடுத்த நிலைக்கு போக விரும்புகின்றவர்கள்,உண்மையான வாழ்வை வாழ விரும்புகின்றவர்கள்.

தொழில் ஆலோசனைகள்,தொழில் ஆரம்பிப்பு உதவிகள் போன்ற எமது சேவைகளை,நேரிலும் Online மூலமாகவும் பெற்றுகொள்ள தொடர்பு கொள்ளுங்கள்..

+94755464964

Yaalan9@gmail.com

Yalaan.com

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: