Skip to content

எண்ணங்களும் ஆசைகளும் பாகம் I

மனித மனமானது எண்ணங்களையும் ஆசைகளையும் அடிப்படையாக கொண்டே தனி மனிதர்களையும்,மனித சமூகத்தையும் இயக்கிகொண்டுள்ளது.எண்ணங்கள் ஆசைகளையும்,ஆசைகள் எண்ணங்களையும் அக,புற நிலைகளுக்கு ஏற்றவகையில் மாறி மாறி உற்பத்தி செய்து கொள்கின்றன.அதிகமான ஆசைகள் எமக்கு தெரிந்தே வருகின்றது,ஆசைகளில் இருந்து வரும் எண்ணங்களும் எமக்கு தெரிந்தவகையானதான் இருக்கின்றது.ஆனால் எண்ணங்களும்,அவற்றில் இருந்து வரும் சில ஆசைகளும் எமக்கு இலகுவில் புரிந்துகொள்ளமுடியாமல் இருக்கும்.காரணம் எண்ணங்கள் எங்கே உற்பத்தி ஆகின்றன,எப்படி எமக்கு வருகின்றன,எவ்வாறு எம்மை வழிநடத்துகின்றன பற்றி போதிய விழிப்புணர்வு மனித இனத்துக்கு இல்லை..எமது மனதுக்கு எண்ணங்கள் எங்கே இருந்து வந்து செல்கின்றனவோ அதற்கான பதிலே கடவுள் எங்கே இருக்கின்றார் என்ற ரில்லியன் டொலர் கேள்விக்கும் பதிலாகும்.ஏனென்றால் இந்த உலகு,பிரபஞ்சம் சக்தியினால் ஆனது.அந்த சக்தியை ஒடுக்கி விரித்து இயக்குவது இந்த எண்ணங்கள்தான்.

எண்ணங்கள்,தனி தனி மனிதர்களை கட்டுபடுத்துவது போலவே,தங்களுக்குள் ஒன்றோடொன்று சேர்ந்தும் பிரபஞ்சம் முழுவதையும் ஆட்டுவிக்கின்றன.இந்த சிறப்பு அம்சத்தினாலேயே தனி மனிதர்களாலும் உலகையும் பிரபஞ்சத்தை ஆட்டுவிக்க முடிகிறது.வரலாற்றில் அரசியல்,கட்டிடகலை,போர்கலை,வணிகம், விளையாட்டு,கல்வி,விஞ்ஞானம் போன்ற பல்வேறு துறைகளில் உலக மட்டத்தில் சாதனைகளை படைத்த,படைக்கும்,படைக்க இருக்கும் தனிமனிதர்கள் எல்லோருமே இந்த எண்ணங்களின் பிரபஞ்ச வலையமைப்பை தமக்காக பயன்படுத்தி கொண்டவர்கள்தான்.தனி மனிதர்கள் தங்களின் தனி தனியான எண்ணங்களை தொடர்ச்சியான காலத்தில் நினைப்பதன் மூலம் அருட்டி அவற்றை வலிமை பெற செய்து,உலகம் முழுக்க வியாபிக்க செய்து தமக்கான வேலைகளை நடத்திமுடிக்கின்றனர்,உதாரணத்துக்கு ஒரு தனி மனிதர் உலகம் முழுவதுமாக ஒரு தொழிலை தொடங்க தொடர்ச்சியாக திட்டமிட்டு தனது எண்ணங்களை வளப்படுத்தி கொண்டிருக்கும் போதே..அவருக்கு மாத சம்பளத்துக்கு வேலை செய்ய தேவையானவர்கள் உலகெங்கும் கிடைத்துவிடுகின்றனர்.அந்த தனிதனி மனிதர்கள் தங்களிடம் உள்ள மன எண்ணங்களை மாத சம்பளம் என்ற ஒன்றினுள் அடக்கிவிடுகின்றனர்.மொத்த பிரபஞ்சதுக்காக எண்ணங்களின் மன சக்தி முடிவிலி,ஒருவர் பணக்காரன் ஆகுவதற்காக பல ஆயிரம் பேர் ஏழைகள் ஆக்கப்படுகின்றனர் என்ற கருதுகோள் தவறு,செயற்கையாக அவ்வாறு நடக்கவில்லை என்று கூறமுடியாது,ஆனா ஒருவர் தனது வாழ்வில் முன்னேறுவதற்கான வழியை அவரின் எண்ணங்களும் ஆசைகளுமே தீர்மானித்துகொள்கின்றன.அதே போல் பல ஆயிரம் பேர் ஏழைகளாக இருப்பதற்கான வழிகளையும் அவர்களின் எண்ணங்களும் ஆசைகளுமே தீர்மானிக்கின்றன.

வரலாற்று உற்றுநோக்கினால் வெற்றி பெறுபவர்கள் அதிகமாக தனி மனிதர்களாகவே இருக்கின்றனர்,தோல்வியுறுபவர்கள் பெரும் கூட்டங்களாகவே இருக்கின்றனர்.தனி ஒருவரின் வலிமையான எண்ண அலைகள்,பர கோடி மக்களின் பலவீனமான எண்ணங்களை இலகுவாகவே வென்றுவிடும்.இங்கே வாழ்க்கையில் ஒவ்வொரு செயல்களும் மனித மனதில் ஏற்கனவே முடிவாகிய பின்னரே செயல்களாக வெளிப்படுகின்றன.மனிதர்களின் சுயம் என்பது தனிமையிலோ,கூட்டத்திலோ தங்கியிருப்பதில்லை,அந்த சுயத்தை சரியாக பேணுவதே நமது எண்ணங்களை வலிமைப்படுத்துவதற்கான முதல்படி…

…. தொடரும்

நன்றி

யாழன் குருவி

2 Comments »

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: